சசிகலா கார்டனை விட்டு வந்து என்ன செய்து கொண்டிருக்கிரார் ? அவரது அடுத்த மூவ் என்ன ? ஜெயலலிதா அவரை என்ன செய்வார் ? இதெல்லாம் அதிமுக தொண்டர்கள் மனதில் தற்போது உள்ள ஹாட் கேள்வி ! ஆனால், போயஸ் கார்டன் விட்டு வந்த சசிகலா இப்போது கூட நத ஷாக்கிலிருந்து வெளி வரவில்லையாம்.
கார்டனை விட்டு நீக்கப்பட்ட சசிகலா இன்னும் அழுதபடிதான் இருக்கிறாராம். எந்த இயக்கமுமின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாராம்.
அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீண்டு வரவில்லையாம். அவர் ‘ஜெ’வுக்கு 10 பக்க கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறாராம். அதில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டிருப்பதோடு தவறுகள் அனைத்தும் அவருக்குத் தெரியாமல் நடந்ததாகக் கூறுகிறாராம். அவர் எப்போதும் ‘ஜெ’வின் நலன் ஒன்றை மட்டுமே தான் கருதினாராம். அவரும் அவரது குடும்பத்தினரும் ‘ஜெ’வுக்காக அனுபவித்த கஷ்டங்களையும், அவருடைய முன்னேற்றத்துக்காக உழைத்ததையும் குறிப்பிட்டு, தான் எந்த பாவமும் அறியாதவர் என்ற ரீதியில் மன்னிப்பு கேட்டு கடிதத்தை நம்பிக்கைக்குரியவர் மூலம் அனுப்பிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கிறாராம். என்ன பதில் தர்ப் போகிறாரோ உடன் பிறவா சகோதரி?
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments