சசிகலா கட்சியை விட்டு நீக்கம் ஜெயலலிதா அதிரடி
தனது நெருங்கிய தோழி ஆருயிர் உடன்பிறவா சகோதரி மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஜெயலலிதா சசிகா மீது எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலையே அதிர்ச்சிக்க்குள்ளாக்கியிருக்கிறது.

sasikala + jayalalitha
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி, நெருங்கிய தோழி என அறியப்பட்ட சசிகலா மற்றும் அவரது கணவர், உட்பட மேலும் பன்னிருவர் அதிமுக விலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதிவியிலிருந்த சசிகலா உட்பட, மற்றும் முக்கிய பொறுப்புக்களில் இருந்த பலர் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கபட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது; தமிழக முதல்வரின் நெருங்கிய தோழியும், அக்கட்சியின் சக்தி வாய்ந்த உறுப்பினருமாகச் செய்ற்பட்டு வந்த சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மேலும் அவரது உறவினர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிய பதின்மூன்று பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது தமிழக அரசியற் களத்தில் பலத்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருயிருக்கிறது.
இந்த நீக்கம் தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலிலதா விடுத்துள்ள அறிக்கையில்; அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் , வி.என்.சுதாகரன் , வி.என். திவாகரன் , டிடிவி தினகரன் , பாஸ்கரன் , டாக்டர் வெங்கடேஷ், ராவணன், அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வாறு நீக்கபட்டவர்கள் அனைவரும் சசிகலா குடும்பத்து உறவினர்கள் என்பதுடன், கட்சியிலும், ஜெயலலிதாவின் வீட்டிலும் அலுவலகத்திலும் கூட முக்கியமாகச் செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அதிமுகவில் கடந்த 25 வருடங்களாகச் செல்வாக்குச் செலுத்தி வந்த சசிகலா, மற்றும் செல்வாக்குடைய ராவணன், டாக்டர் வெங்கடேஷ், என்பவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.
கட்சி நடவடிக்கைகளிலும், அரச நடவடிக்கைகளிலும், தவறாகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் விலக்கப்பட்டதாக தகவல்கள் சில வெளிவந்துள்ள போதம், இது தொடர்பான விரிவான விளக்கங்களும், இந்த நடவடிக்கையின் தாக்கங்கள் கட்சியியைப் பாதிக்குமா என்பது போன்ற விபரங்கள் அடுத்த சிலநாட்களில் கூடவிருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் போதே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
tags : sasikala, jayalalitha, சசிகலா, ஜெயலலிதா, ஜெயலலிதா + சசிகலா, அதிமுக, அரசியல், ஜெ, நீக்கம், சசிகலா நீக்கம், sasikala expelled
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments