/* ]]> */
Jun 242021
 

சக்தி மிக்க மூலிகை

சக்தி மிக்க மூலிகை

மூலிகைகள் நோய்களைக் குணப்படுத்தும். சில மூலிகைகளுக்கு சில சிறப்பு பண்புகள் உண்டு. அதனால், மருஇத்துவரெய்டம் உரிய ஆலோசனைகளைப் பெற்று உரிய முறையில் பயன்படுத்துவது நல்லது.

மூலிகை சாறை சொட்டு சொட்டாக விருப்பத்துடன் அருந்த வேண்டும். எந்த மூலிகை சாறையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அருந்தக் கூடாது. மூலிகை இலையை தனியாக சாப்பிடத் தயங்கினால், கீரைகளுடன் சமைத்தோ, சூப் தயாரித்தோ சாப்பிடலாம்.

முலிகைகளின் சிறப்பு பண்புகளைப் பார்ப்போம்:

  • துளசி இலைச் சாறு சாப்பிட்டால், ரத்தத்தில் விஷத் தன்மை வெளியேறும்.
  • அருகம்புல் சாறுசாப்பிட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். தோல் வியாதிகளுக்கும் இது அருமருந்து.
  • வாழைத் தண்டு சாறை மருத்துவர் ஆலோசனைப்படி உரிய இடைவெளியில் சாப்பிட்டால், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.
  •  கொத்துமல்லிச் சாறு பசியைத் தூண்டும். வாதம், நரம்புத் தளர்ச்சியைக் குணமாக்கும்.
  • புதினாச்சாறு சிறந்த மலமிளக்கி; ஜீரணக் கோளாறை சரிசெய்யும்.
  • வல்லாறைச் சாறு மஞ்சள்காமாலை, நரம்புத் தளர்ச்சி, ஞாபக சக்திக்கு அருமருந்து.
  • தூதுவளைச் சாறு நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சளியை விரட்டும்.
  •  மணத் தக்காளிச் சாறு வாயுத் தொல்லையை தீர்க்கும்.
  • தும்பைச் சாறு இருமல், மார்புச் சளிக்கு அருமருந்து.
  •  வெங்காயம், பூண்டு கலந்த சாறு கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
  • காய்கறிச் சாறு  சாப்பிட்ட  20 நிமிடத்தில் ஜீரணமாகி சக்தியாக மாறும்.
  • இஞ்சியை அரைத்து, சாறு எடுத்து சிறிது நேரம் வைத்திருந்தால்,சுண்ணாம்பு மாதிரி அடியில் தங்கும். இதை அகற்றி, தெளிந்ததை தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நலம் தரும்.

***************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>