/* ]]> */
Jun 122017
 

கோல்டன் மில்லட் இட்லி- செய்வது எப்படி?

GOLDEN MILLET IDLI-

தேவை:

கோல்டன் மில்லட்-1/2 தம்ளர்; உருளைக் கிழங்கு-2; வெங்காயம், தக்காளி தலா-1; எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய்த்தூள், இட்லி மாவு, உப்பு.

செய்முறை:

உருளைக் கிழங்கை அவித்து, தோல் உரிக்கவும்.  கோல்டன் மில்லட்டை சிறிது தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போட்டு தாளித்து,, வெங்காயம் தக்காளி, மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மெல்லிய தீயில் கிளறவும். இடையில் தேவையான அளவு மிளகாய்த்தூள், உப்பு போடவும். பின்னர் வேக வைத்த கோல்டன் மில்லட்டைக் கலந்து, நன்கு கிளறி இறக்கவும்.

ஆறியதும் இட்லி குழியில் அரை கரண்டி மாவை ஊற்றி, இதை உருட்டி, சிறிது  தட்டி, நடுவில் வைத்து, மீதமுள்ள மாவை ஊற்றி வேக வைத்து இறக்கவும். சுவையான கோல்டன் மில்லட் இட்லி தயார்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>