ரஜினியின் அடுத்த படம் அறிவிப்பு வந்துவிட்டது . கோச்சடையான் என பெயரிட்டிருக்கிறார்கள். ரஜினி நடிக்க அவரது மகள் ஐஷ்வர்யா இயக்கும் படம் கோச்சடையான். இது ஒரு 3 டி (3 D) படமாக தயாரிக்கப்பட உள்ளது.
ராணா சப்ஜெக்ட்டுக்கு காஸ்ட்யூம் மேக்கப் என அதிகம் சிரமம் எடுக்க வேண்டியிருப்பதாக ரஜினி முன்பே குறிப்பிட்டிருந்தார். ஆகவே , ராணாவிற்கு முன்பாக டிசம்பரில் இருந்தே கோச்சடையான் பட வேலைகளை துவக்க இருப்பதாக ரஜினி தரப்பு தகவல் சொல்கிறது. இந்த படத்திற்காக ராணா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கதை , திரைக்கதை, வசனம் எழுதி மேலும் இயக்க மேற்பார்வை ( direction supervision) ம் செய்கிறார்.ஈரோஸ் இன்டர்நேஷனலும் மீடியா ஒன்னும் இணைந்து தயாரிக்கும் மெகா படமாக ஆகஸ்டு 2012 திரக்கு வருமாறு தயாரிக்கப்படுகிறது கோச்சடையான். அவதார், டின் டின் போல மோஷன் கேப்சரிங்க் டெக்னாலஜி பயன்படுத்தி தயாரிக்கப்படும் முதல் இந்தியப் படமாக கோச்சடையான் இருக்கப் போகிறது.
ரஜினி தவிர மற்ற நடிக நடிகையர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆங்கிலத்தில் இந்தப் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்
tags : next rajini movie, rajini next movie, rajinikanth, rajini, rajinikanth next movie, kochadaiyaan, கோச்சடையான், ரஜினி படம், ராணா, ரஜினி அடுத்த படம், அடுத்த ரஜினி படம், கோச்சடையான் + ரஜினி,
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments