Jun 292020
கொய்யா சட்னி- செய்வது எப்படி?
தேவை:
தைவான் சிவப்பு கொய்யா-2; உப்பு-1 ஸ்பூன்; பச்சை மிளகாய்-4; பூண்டு-5 பல்; இஞ்சி- சிறிய துண்டு; புளி- சிறிய நெல்லிக்காயளவு; எண்ணெய்-1 ஸ்பூன்; கடுகு – ½ ஸ்பூன்; ஜீரகம்-1/2 ஸ்பூன்; கறிவேப்பிலை- சிறிது; காய்ந்த மிளகாய்-1.
செய்முறை:
- கொய்யாவை சிறு துண்டுகளாக நறுக்கவும். விதைகளை நீக்கிவிட வேண்டும். மிக்ஸியில் கொய்யா துண்டுகள், இஞ்சி, பூண்டு, புளி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, ஜீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கொய்ய விழுதைப் போட்டு, லேசாக ஒரு பிரட்டு பிரட்டிவிடவும். அடுப்பை அணைக்கவும்.
- இட்லி, தோசைக்கு சுவையான சட்னி தயார்.
***********************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments