/* ]]> */
Jan 092021
 

கொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா? அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா?

covid 19 & mosquitoes

கோவிட்19 கொசுவின் மூலம் பரவாது என்று ஆரம்பத்திலிருந்தே உலக சுகாதார நிறுவனம் கூறி வந்துள்ளது. இது உண்மைதான் என்பது போல் தொடர்ந்து சொல்லப்பட்ட சில ஆராய்ச்சிகள் நமக்கு கூறுகின்றன.

கோவிட்19  நோய்க்கு காரணமான வைரஸ் கிருமிக்குப் பெயர் SARSCaV2 . இந்த வைரஸ் சுவாசப் பாதையில் இயங்குவது. பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும்  வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது  அல்லது எச்சில் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் நீரிலிருந்து  பரவுகிறது  இன்றுவரை கொசுவின் மூலம் இது பரவுகிறது என்பதற்கான எந்த ஆதாரமும்  கிடைக்கவில்லை. கன்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் இது குறித்து விரிவான ஒரு ஆராய்ச்சி செய்து மேற்படி உண்மையை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த வைரஸால் ஏடெல், கியூலக்ஸ் போன்ற வகைஅயைச் சேர்ந்த
(இவைதான் மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள்) கொசுக்களில் தங்களை உயிர்ப்பித்துக்கொள்ள முடியவில்லை. இந்த வைரஸும் தானாக இயங்காது. அதற்கேற்ற மற்றொரு பகுதியோடு  சேரும்போதுதான் இயங்கும்.

கெடுதலிலும் ஒரு நல்லது . எயிட்ஸ், கோவிட்19  போன்றவை கொசுவின் மூலம் பரவுவதில்லை.  அப்படி பரவினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாகத்தான் இருக்கிறது.

***************************

லிக்காத ஒன்றா?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>