/* ]]> */
Jan 062012
 

கேள்வி பதில் – சோழன் பதில்கள் -

மூன்றாம் கோணம் கேள்வி பதில் பகுதி

அஞ்சலி பாவ்னா யாரு ஹோம்லி?

 

anjali

anjali

 

bhavna

bhavna

1.அஞ்சலி – பாவ்னா யார் அதிகம் ஹோம்லி? இப்ப தெரிஞ்சாகணும் எனக்கு! – ஈரோடு பாசக்காரன்

எதுக்கு பாஸ் வம்பு… உங்க ஹோமுக்கு ஒண்ணு என் ஹோமுக்கு ஒண்ணு கூட்டிக்கிட்டு சமாதானமாய் போயிடலாம்… எனக்கு நீங்களா பாத்து எது கொடுத்தாலும் ஓகே! ( பாசக்கார பய புள்ளக பா)

 

2. பெண் ஒருவர் ஐ.எம்.எஃப் தலைவர் ஆகியிருக்கிறாரே …. – ஜார்ஜ் ஆடம் , ஹைதராபாத்

ஃப்ரென்சு அமைச்சர் லகார்டே ஐ.எம்.எஃப் தலைவர் ஆகியிருக்கிறார். இதற்கு முன் இருந்த தலைவர் ஹோட்டல் பெண்ணுடன் ரூமில் ஏடா கூடாமாய் நடந்ததால் பெண்ணின் அழகில் மயங்கா தலைவராய் இந்த முறை தேடிப் பிடித்திருக்கிறார்கள்.

3. அம்மா வந்ததுக்கு அப்பால உங்க ஊட்டுல கரண்டு கீதா நைனா? – சிபி , சென்னை

ஐயா இருந்தப்ப எவ்ளோ பிரகாசமா இருந்துதோ அத்த வுட பிரகாசமா கீது நைனா!

4. ஜெனிலியாவுக்கு கல்யாணமாம்… நல்ல தூக்க மாத்திரை எங்கு கிடைக்கும்? – ரிஸ்வான் , குவைத்

கல்யாணம் பண்ணா தூங்காம முழிக்கணுங்க… எதுக்கு தூக்க மாத்திரை ?!!

5. டர்டி பிக்சர் வந்தப்புறம் சில்கா வித்யா பாலனான்னு சொல்றேன்னு சொன்னீங்களே? – கோவை செழியன்

சில்க் கிட்டத்தட்ட நூறு படங்களில் காண்பித்ததை ஒரே படத்தில் காண்பித்து விட்டார் வித்யா பாலன்…. ஆனாலும் சில்கின் அந்த உதட்டு சுழிவு செக்ஸ் அப்பீல் வித்யா பாலனுக்கு வரப் போவதில்லை ! வித்யா பாலன் ஒரு நிஜ நடிகையாய் படத்தில் வாழ்ந்திருக்கிறாரே… அந்த தேர்ந்த நடிப்பு சில்கிடம் இருந்ததுமில்லை !

6. ஸ்டாக் மார்க்கெட் தொடர்ந்து சரியும் என சொன்னார்கள் ஆனால் ஏறுமுகமாகிவிட்டதே,  பணம் போடலாமா? – ஷிர்வானி, சென்னை

நான்கு மாநில தேர்தல் முடியட்டும் எதுக்கு அவசரப்படுறீங்க?

7. ராஜாவின் கன்சர்ட் போனீர்களா? – கீதா கார்த்திகேயன் , சேலம்

மிஸ் பண்ணிட்டேன் பாஸ். பார்த்தவர்களுக்கு ராஜ யோகம் தான் ! ஆமாம், ஜானகி ஏன் தொடர்ந்து ராஜாவின் மேடை நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார்?

8. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ? – சோமு ஃபார் யு , இடம் குறிப்பிடவில்லை

யார் சொன்னது கங்காரு சைவம் என்று… பாருங்கள் ! காங்காரு புலியை சாப்பிட்டு ஏப்பம் விடப் போகிறது!

Ram Shriram google Amazon

ராம் ஸ்ரீராம்

9. ராம் ஸ்ரீராம் பற்றி சில வரிகள் சொல்லுங்களேன்.. மாதங்கி, சென்னை

கூகுளின் ஆரம்ப காலத்திலேயே அதில் பணம் போட்ட கில்லாடி முதலீட்டாளர். கூகிள், அமேசன் என உலக இன்டர்னட் கம்பெனிகளிகளில் எல்லாம் தடம் பதித்தவர்… மெட்ராஸ் பல்கலைகழகத்திலிருந்து தேர்வு பெற்ற தமிழர் ! திரைகடலோடி திரவியம் தேடி தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்!

நீங்களும் உங்கள் கேள்விகளை உங்கள் வலை தள முகவரியோடு moonaramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பலாம்! பெயர் வலை தளம், லிங்கோடு பிரசுரிக்கப்படும்! 

 

tags : ram shriram, ராம் ஸ்ரீராம், பாவ்னா, அஞ்சலி, ஐ.எம்.எஃப், கூகிள், அமேசான், வித்யா பாலன், சில்க், லகார்டே, ஜெனிலியா, சோழன், சோழன் பதில்கள்,

article on Lady IMF President, Ram Shriram, the founder investor of google and Amazon and about bollywood hot picture dirty picture comparing vidya balan and silk smitha and about how stock markets will fare

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>