/* ]]> */
Jan 242020
 
hair falling

கூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்:

hair falling

முடி கொட்டாமல் இருப்பதற்கான வழிமுறைகள்:

  1. முடியை அலச வேண்டும். எப்போதுமே தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும்.
  2.  குடுகு எண்ணெய்:
  3.  ஒரு கப் கடுகு எண்ணெய் எடுத்து 4 ஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்தக் கலவையை நன்கு கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி, ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். அந்த எண்ணெயை வைத்து தலையை நன்கு மஸாஜ் செய்யவும். முடி ஆரோக்கியம் பெறும்.
  4. இயற்கை ஷாம்பு:5 டீஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் பயத்த மாவை ஒன்றாக வைத்து ஒன்றாகக் கலந்து அதனை தலைக்கு தேய்த்து ஊற வைத்து நீரில் அலசினால், முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமாக வளரும்.
  5.  பசலைக் கீரை சாறு: தினமும் ஒரு கப் பசலைக் கீரை சாற்றை பருகினால், முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
  6. கொத்தமல்லி: பச்சைக் கொத்தமல்லி வாங்கி அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து முடிய நன்கு அலசினால், முடி நன்கு வளரும்.
  7. ஒரு கையளவு வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து மறு நாள் அந்த சாறை எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
  8.  வெந்தயத்தைப் பொடி செய்து அதனைத் தேங்காய் எண்ணெயில் 1 வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதைத் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சிலருக்கு சிறு வயதிலேயே இள நரை தோன்றும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இள நரை மாயமாகிவிடும்.
  9. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால், முடி வளரும்.
  10. 10.  தேங்காய்ப் பால்:தேங்காய்ப் பால் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு முடியில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும். முடி நன்கு மென்மையாகும்.

11. கற்றாழை: கற்றாழை ஜெல்லை ஸ்கல்ப்பில் தடவி மஸாஜ் செய்யவேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

12. டஹ்யிர்: ஸ்கல்ப்பில் உள்ள பொடுகைப் போக்க  2 ஸ்பூன் மிளகுத் தூளை தயிரில் கலந்து ஸ்கல்ப்பீல்தடவி 1 மனி நேரம் ஊற வைத்து மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.  பொடுகுத் தொல்லை நீங்கும். வறட்சியும் நீங்கும்.

  1. 13.   எண்ணெய்க் குளியல்:  ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனைத் தலையில் தடவி, நன்கு மஸாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலசவும்.
  2. 14.  இயற்கையான சாறுகள்: பூண்டு, இஞ்சி அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து இரவில் படுக்கும்போது டஹ்டவி, ஊற வைத்து காலையில் குளித்து வர முடி உதிர்வதைத் தடுக்க முடியும்.
  3. 15.  தியானம்: மன அழுத்தம் குறைய தியானம் செய்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

********************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>