/* ]]> */
Mar 082016
 

கூந்தலுக்கு ஆரஞ்சுத் தோல் சிகிச்சை:

கூந்தலுக்கு ஆரஞ்சுத் தோல் சிகிச்சை

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலிஜொலிக்க வைக்கிறது, ஆரஞ்சுத் தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை , பூலான் கிழங்கு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவற்றைச் சேர்த்து ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

இந்தப் பௌடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.இப்படி செய்து வந்தால், முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனைப் பௌடராகவும் பயன்படுத்தலாம். தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், , அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது.

ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை:

உலர்ந்த ஆரஞ்சுத் தோல் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பிஞ்சுக் கடுக்காய் 10 கிராம், வால் மிளகு10 கிராம், பச்சைப் பயறு ¼ கிலோ எல்லாவற்றையும் கலந்து அரைத்துக்கொள்ளுங்கள் இதை வாரம் இருமுறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன், சுத்தமும் வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>