/* ]]> */
Dec 052011
 

கூடங்குளம் என்ற இடம் ஏன் அணுமின் நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அங்குள்ள விஞ்ஞானி திரு .ஆறுமுகம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,ஒரு வேண்டுகோள் முழுமையாக படியுங்கள்….

கூடங்குளம் அணுமின் நிலையம்

தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடங்கலாமா வேண்டாமா என பல பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன,, இதே நேரத்தில் எனக்கு தெரிந்த,நான் அறிந்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… நானே தயாரித்த அறிக்கை என்பதால் தமிழ் தட்டச்சில் தவறு இருந்தால் சுட்டி காட்டவும், அல்லது மன்னிக்கவும்…. இப்படிக்கு அன்புள்ள ஆறுமுகம்…

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மின்சார தேவைக்கும்.. இன்றியமையாத uranium எனும் அணுசக்தி மிகவும் அவசியம்.. எடுத்துக்காட்டாக.. டீஸல் சக்தியில் ஓடும் ஒரு நீர்மூழ்கி/விமானம் தாங்கி கப்பலானது 72 மணிநேரத்திற்கு ஒரு முறை மீண்டும் டீஸல் நிரப்ப வேண்டி வரும்… ஆனால் அணுசக்தியில் இயங்கும் கப்பலோ ஒரு முறை fill செய்தால் மீண்டும் 35 வருடம் கழித்து எரிசக்தி தேவைக்கு கரைக்கு வந்தால் போதும்… இதுவே அணுவின் அளப்பெரிய ஷக்தி…

SOURCE..WIKIPEDIA As a result of the use of nuclear power, the ships are capable of operating for over 20 years without refueling and are predicted to have a service life of over 50 years.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களையும், இந்த இடத்தை தேர்வு செய்தற்கான காரணத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்,,

1 )கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி (thickness) கொண்டது,,, கற்பனை கூட பண்ணிபார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது…முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சில்’ஆல் பரிசோதிக்க பட்ட பின்னரே அந்த concrete நிரப்பப்பட்டு உள்ளது,,,ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

2)திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில் அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை, ஏனெனில் நான் கூறியபடி ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்..

3))சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது,,, சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது,,, இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும்… ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை,,,

4 ) அணுவை பிரிக்கும் செயலானது கட்டுபடுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும்,அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்க பட்டு உள்ளது,,,

5 ) உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக நவீனமானது…,அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான coolant/குளிர்விப்பான் ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு coolant/குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது… ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு generator’கள் உபயோகபடுத்த படுகின்றன…

6) சூறாவளி காற்றின் வேகத்தை கட்டுபடுத்த ஏற்றவாறு உலையின் மேல் பகுத்து வடிவமைக்க பட்டு, இரும்பால் ஆன ஒரு பாதுகாப்பு வளையமும் வைக்கப்பட்டு உள்ளது,,,
7 ) வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத வாறு புகைபோக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது,,,

இதை உங்கள் நண்பர்கள்,அறிந்தவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..பொருளாதாரத்தில் பிந்தி வரும் நமது தாய்நாட்டை இது போன்ற பெரிய திட்டங்களால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை புரிய வையுங்கள் !

படித்ததற்கு நன்றி……

- ஆறுமுகம்

 

இது நமது வாசகர் திரு சந்தொஷ் நமக்கு அனுப்பி வைத்த பதிவு. மாற்றுக்குருததுக்கள் இருப்பின் வாசகர்கள் பின்னூட்டம் மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.

tags : கூடங்குளம், அணுமின் நிலையம்,  koodangulam, nuclear reactor, koodangulam nuclear reactor , koodangulam nuclear plant,  கூடங்குளம் அணு மின் நிலையம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>