/* ]]> */
Mar 112011
 

 

குஷ்பூ - ரம்யா கிருஷ்ணன்

குஷ்பூ - ரம்யா கிருஷ்ணன்

1. வரப்போகும் தேர்தலில், குஷ்பு ,தமிழ் நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவருக்குப் போட்டியாக ரம்யா கிருஷ்ணனைக் களமிறக்க முயற்சி நடக்குது. ஆனால் ரம்யா சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை.

 

 

2. ராதிகா சரத்குமார், தனது ராடன் டி.வி. நிறுவனத்தில் வேலை செய்யும் 600 பேருக்கும் 3 வேளையும் தனது சொந்த செலவில் சாப்பாடு போடுகிறார். தேர்தலுக்கும் இதுக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்லியே?

 

 

விஜய்காந்த்

3. ஒருத்தர் சாப்பாடு போடுறார். இன்னொருத்தர் போட்ட சாப்பாட்டை நிறுத்திட்டார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் , தன்னுடைய விருகம்பாக்கம் இல்லத்தில் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.00 மணிக்கு இலவச பிரியாணி, மற்றும் சாம்பார், தயிர், தக்காளி, எலுமிச்சை சாதங்கள் வழங்கி வந்தார். சூடாகவும் ,சுவையாகவும் இருக்கும் அந்த உணவுக்காக சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர் வீட்டுமுன் குவிந்துவிடுவார்களாம்.’ கண்ணு படப் போகுதைய்யா சின்னக் கவுண்டரே’ ன்னு பாடலாமான்னு பார்த்தால், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த உணவு இப்ப திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டதாம். தேர்தல் விதிமுறைகளில் இதுவும் ஒன்றோ? இல்லை வேறு காரணமோ? தெரியல. இது தெரியாமல் நாக்கில் எச்சில் ஊறியபடி, பலர் வந்து விஜயகாந்த் வீட்டை ஏக்கத்துடன் பார்த்துவிட்டுச் செல்லுகின்றனறாம்.

3. ஒரு கிசுகிசு, கேளுங்க!. தேர்தல் நேரத்துல கிசுகிசு இல்லாம இருக்குமா? என்னதான் தேர்தல் ஆணையம் பயமுறுத்தினாலும், பணப்பட்டுவாடா ஆரம்பிச்சாச்சுங்க. வேலூர் மாவட்டத்தில் உள்ள, 1200 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 8000 பேருக்கு, ஒரு கட்சி, 3 கோடியே 80 லட்ச ரூ.பணப்பட்டுவாடா நடத்திவிட்டதாம். தலைவர், செயலர்களுக்கு, ரூ.5000மாம். உறுப்பினர்களுக்கு, எண்ணிக்கைக்குத் தக்கபடி ரூ. 20,000ஐ பிரிச்சுக்கணுமாம். யார் யார் காட்டுல மழையோ?

4.திருமங்கலம் இடைத் தேர்தல் ஒரு வித்தியாசமான, பலராலும் பலவிதமாகப் பேசப்பட்ட இடைத் தேர்தல். ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்றே அங்கு நடந்த, பணப் பட்டுவாடா பற்றிப் பேசப்பட்டது. ஒரு ஓட்டுக்கு ரூ.1000., மொய் விருந்து, அரசு வேலைக்கன உத்திரவாதம் என்று அமர்க்களப்பட்டதாம். அதைவிட ,அதிக ‘கவனிப்பு’ இப்போது இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

ராமராஜன்

5.விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ள நடிகர் ராமராஜன் இப்போது தேறி வருகிறாராம். இன்னும் சில நாட்களில் அம்மாவைப் பார்த்துவிடுவேன். அதற்கப்புறம் அம்மா தேர்தலில் போட்டியிடச் சொன்னாலும் சரி; அல்லது பிரச்சாரம் பண்ணச் சொன்னாலும் சரி . தாராளமாய் செய்வேன் என்கிறார், தென் மாவட்டங்களில் ஏராளமாய் ரசிகர்களைககொண்ட இந்த நடிகர்.ஆச்சரியப்படும் விதமாக இன்னும் அவருடைய ரசிகர் மன்றங்கள் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம்.

seeman

6. ‘தி.மு.க. எதிர்ப்பு தேவையில்லை’ என்ற நிலையை ‘சீமான்’ எடுத்திருப்பதன் பிண்ணனி என்ன என்பதற்கு அவர் தரும் விளக்கம் ”தி.மு.க.வை அடிக்கணும்னு நினச்சா , அது , அ.தி.மு.க. எனும் இன்னொரு தீய சக்தியை மேலே ஏத்திவிட்டதா ஆகிவிடும். அதனால், காங்கிரஸ் என்னும் பொது எதிரியை இந்த மண்னிலிருந்து அப்புறப்படுத்தணும்கிறதுதான் என்னுடைய நோக்கம் என்கிறார்.

7. கூட்டணிப் பேச்சு ஆரம்பிக்கும் போது, முதன்முதல், விடுவிடுவென, டெல்லி சென்ற கலைஞர், அதன்பின்னர் பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ‘கசந்த உறவு’ என்றாகிவிட்ட நிலையில் டெல்லி சென்று சோனியா காந்தியிடம் பேசுமாறு கலைஞரிடம் சில தலைவ்ர்கள் கூறியபோது, ‘கடந்த முறை டெல்லி சென்று பட்டதெல்லாம் பத்தாதா?’ என்றாராம். சோனியா காந்தியைச் சந்திக்கக் கொடுத்த அப்பாய்ன்ட்மென்ட் பலமுறை கேன்சல் ஆனதாம். ஒருதடவை, மதியம் 3. மணிக்கு கொடுத்த அப்பாய்ன்ட்மென்ட் இரவு 7.00 க்குத் தள்ளிப் போடப்பட்டதாம். ‘ராகுல், கோல்ஃப் விளையாடப் போய்விட்டார். கிளப் 5.30 மணி வரைதான் திறந்திருக்கும். அதன் பிறகு பார்க்கலாம். என்று கூறிவிட்டார்களாம்.ஆக, செல்லக் குழந்தை ராகுல் காந்தி கோல்ஃப் விளையாடிவிட்டு வரும் வரையில் , 4 மணி நேரம் ஒரு மாநில முதல்வர் காக்க வேண்டியதாகிவிட்டது. இனியும் அப்படி நடக்க வேண்டுமா? ” என்று சொல்லித்தான் டெல்லி யோசனையைக் கைவிட்டாராம், கலைஞர்.

bhagyaraj

8.தி.மு.க.வில் பதவி கிடக்காத காரணத்தால், நொந்து கிடந்த, நடிகர்- டைரக்டர் பாக்கியராஜை, அழைத்து கூலாக்கிய கருணாநிதி , கழகத்துக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய,சினிமாப் புள்ளிகளைச் சேர்க்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறாராம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>