குறும்பட கார்னர் – சொல்ல மறந்துட்டேன் – குறும்படம்
காதலும் வன்முறையை போல இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் . அதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு கரையேறுபவர்களும் உண்டு , ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்படுபவர்களும் உண்டு …
” காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் ” என்றான் பாரதி … இன்றோ ” காதல் காதல் காதல் போயின் காதல் காதல் காதல் பிறரோடு ” என்பது வழக்கமாகிவிட்டது … அப்படிப்பட்ட ஒரு காதல் மாயைக்குள் சிக்கிய கார்த்திக்கின் கதையே ” சொல்ல மறந்துட்டேன் ” குறும்படம் …
காதல் தோல்வியுடன் ஹளுஷினேஷனையும் , கொஞ்சம் திகிலையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் … கதைக்கான கருவை தவிர டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதாக இல்லையென்றாலும் , ஒரே ரூமுக்குள் வைத்து படத்தை சுருக்கமாகவும் , சுவாரசியமாகவும் சொன்ன விதம் அருமை …
கார்த்திக் கேரக்டரில் நடித்திருக்கும் உமாபதி நன்றாக நடித்திருந்தாலும் மற்ற மூவரின் நடிப்பு ரொம்ப சுமார் … பார்த்திபன் இயக்கிய “ குடைக்குள் மழை ” படத்தை இந்த குறும்படம் நியாபகப்படுத்தினாலும் முடிவில் வைத்த ட்விஸ்ட் அழகு …
” சொல்ல மறந்துட்டேன் ” தலைப்பு பொருத்தமாக இருந்தாலும் அதையே இருபது தடவைக்கு மேல் சொல்ல வைத்ததை தவிர்த்திருக்கலாம் …
இயக்கம் : கமலகண்ணன்
தயாரிப்பு : பி.கே.யு ப்ரொடக்சன்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments