
சிலு சிலுவென வீசும் தென்றல் , மழைக்கு முன் வரும் தூறல் , குழந்தையின் சிறு புன்னகை , மனக்க மனக்க குடிக்கும் பில்டர் காபி இவையெல்லாம் தரும் சுகத்தையும் , சிலிர்ப்பையும் குறும்படத்திலும் காண முடியும் … அப்படிப்பட்ட குறும்படங்களை மூன்றாம் கோணத்தில் பகிர்ந்து கொண்டால் என்ன என்று எனக்கு தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த ” குறும்பட கார்னர் ” … என்ன தான் பணம் சம்பாதித்தாலும் , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வகை வகையாய் தின்றாலும் அம்மா கைகளில் குவித்து குடுக்கும் ஒரு பிடி சோறுக்கு ஈடாகுமா ? …
இந்த கேள்விக்குள் புதியது வந்தாலும் பூர்வீகத்தை மறக்காத எத்தனையோ விஷயங்கள் உள்ளடக்கம் … இந்த மெசேஜை நேரடியாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் குறும்படமே “பண்ணையாரும் பத்மினியும் ” … இயல்பான நடிப்பு , நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான இசை இதன் சிறப்பம்சங்கள் …
இயக்கம் : எஸ் . யு . அருண் குமார்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments