/* ]]> */
Sep 242011
 

 ” அப்பா “  சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ … வெளியில் சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளே அழ வைக்கும் மனிதர்  … கல்யாணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருப்பவர் கூட ஒரு அவசரம் என்றால் அணுகும் நபர் …

அப்பா வந்தார் “  குறும்படம் இந்த பாசத்தை குறைவான நிமிடங்களில் நிறைவாக பதிய வைக்கும் குறும்படம் … அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்ட ஒரு மகனுக்கு முன்னால் திடீரென பத்து வருடங்கள் கழித்து அப்பா வந்து நின்றால் எப்படி இருக்கும் ? …

அப்பாவாக சுவாமிநாதன் நடராஜனும் , மகனாக நவீன் நாதனும் நன்றாக  நடித்திருக்கிறார்கள் … அதிலும் அப்பாவாக வருபவர் அப்பப்பா என்ன இயல்பான நடிப்பு … ஒளிப்பதிவு அருமை … இசை ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும் முடிவில் மனதில் நிற்கிறது … வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து நம்மவர்கள் பணியாற்றியிருக்கும் படம் …

படத்தின் ஆரம்ப காட்சிகளில் கிளைமாக்ஸ் காட்சிக்கான லீட் கொடுத்ததை தவிர்த்திருக்கலாம் … வேலை நிமித்தமாகவோ , குடும்ப சூழ்நிலையாலோ அப்பாவை பிரிந்து வாழ்பவர்களுக்கு ஒரு நிமிடம் அவரை நினைவுபடுத்தும் படம் …

இயக்கம் : வெங்கடேஷ் பாபு , தயாரிப்பு : தீபா ராமானுஜம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>