/* ]]> */
Oct 262020
 

குரு பெயர்ச்சி 2020-21  முன்னுரை:

guru 20

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி – 15.11.2020 அன்று இரவு 2.55 க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 (20/11/2020) கார்த்திகை மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆனி மாதம் குரு பகவான் வக்ர கதியில் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். இதே போல குரு பகவான் ஐப்பசி மாதம் 30ம் நாள் 15.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேர்கதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஏழாம் பார்வையால் கடக ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார்.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குரு சனியின் ராசியின் வீட்டில் அமர்ந்து ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை மாலை 6:01 மணிக்கு நகருவதன் மூலம் மகரத்திலிருந்து கும்பத்திற்குள் நுழைகிறது. செப்டம்பர் 15 புதன்கிழமை வரை இந்த நிலையில் இருப்பவர், பின்னர் வக்ர நிலை தொடங்குவார் மீண்டும் 4:22 மணிக்கு மகரத்திற்குள் நுழைவார்கள். அதன் பிறகு அவர்கள் மீண்டும் நவம்பர் 20, சனிக்கிழமை காலை 11:23 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசியில் நுழைவார்.

இத்தகைய சூழ்நிலையில், குருவின் இந்த மாற்றம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ராசியின் ஜாதகரர்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளைப் பார்க்கிறார்.:

குரு பகவான் 2,5,7,9&11 ஆகிய இடங்களில் வாசம் செய்யும்போது நற்பலன்களை வாரி வழங்குகிறார்.  மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம் மற்றும்  கும்ப ராசிக்காரர்கள் இந்த குருப் பெயர்ச்சியினால் நன்மையடைவர்.

அடுத்த குருப் பெயர்ச்சி  நிகழும்வரை இங்கே தரப்பட்டுள்ள  பலன்களை அனைவரும் கருத்தில் கொண்டு கவனத்துடன் செயல்பட வேண்டும். அனுகூலமற்ற ராசிக்காரர்கள்,  கீழே தரப்பட்டிருக்கும் பரிகார பூஜைகளைத் தவறாமல் செய்து வந்தால், நலம் பெறலாம்.   மேலும் கீழே தரப்பட்டிருக்கும் குரு ஸ்தலங்களுக்கு, விஜயம் செய்து குருபகவானைத் தரிசிக்கவும்.

குரு ஸ்தலங்கள்:

  1. தஞ்சை மாவட்டம் வலங்கிமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி.
  2. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித் துறை
  3. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியறை
  4. தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோயில்
  5. சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம்
  6.  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திட்டை

மேற்குறிப்பிட்ட குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தாலும்சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தாலும் அல்லது’

வீட்டிலிருந்தபடியே

“ வ்ருஷப த்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹ்ஹே

தந்நோ: குருப்ரசோதயதயாத்

என்று குருபகவானின் காயத்ரி மந்திரத்தை  தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தாலும் குரு பகவானால் ஏற்படகூடிய அசுப பலன்கள் குறையும். வியாழக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று, தட்சிணாமுர்த்தியை கொண்டக் கடலை மாலையிட்டும், மஞ்சள் மலர் மாலை சாத்தியும், நெய் தீபமிட்டு வணங்குவதும் சிறந்தது.

இங்கே தரப்பட்டிருக்கும் பலன்கள் அசுப பலன்களாக இருந்தால் அதை எண்ணிக் கவலைப்படவென்டாம்.  நீங்கள் அதைக்கண்டு அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், இந்த குருப் பெயர்ச்சிக்குத் தரப்பட்டிருக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை ஆதாராமாகக் கொண்டவை.

(அ). உங்கள் ஜாதகப்படி உங்கள் திசா புத்தி உங்களுக்கு சாதகமாக இருந்து, இந்த கோச்சாரப்படியுமதஷ்டம் உங்களுக்கு அமோக இருக்கும்.

(ஆ)ஜாதகப்படி நல்ல அமைப்பு இருந்து கோட்சாரம் சரியில்லையென்றால், அந்த குறிப்பிட்டகோட்சார காலத்திற்கு மட்டும் நல்ல பலன் பலன் குறைவாக நடைபெறும்.

(இ). ஜாதக பலன் நன்றாக இல்லாமல் கோட்சாரம் சிறப்பாக இருந்தால், நல்ல பலன் குறைவாக நடைபெறும்.

(ஈ): ஜாதகப்பலன் கோட்சார கோட்சாரப் பலன் இரண்டும் தீமை தருவதாக இருந்தால், அதிக கெடுபலன்களே நடைபெறும்.

எனவே உங்கள் சுய ஜாதகத்தை  ஒருமுறை    பரிசோதித்துக்கொள்ளவும்.

இனி உங்கள் ராசிக்குரிய பலன்களைப் படித்து  அறியுங்கள்.

வாழ்க வளமுடன்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>