குரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை:
குரு பகவான் மாசி மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை மாலை ஐந்து முப்பது மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் . பின்பு, . 2020 மார்ச் 30 முதல் 2020 ஜூன் 30 2020 வரை வக்கிர சஞ்சாரம் செய்து பின் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தனுசு ராசியில் இருக்கும் குரு தனது பொன்னான பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளைப் பார்க்கிறார்.:
குரு பகவான் 2,5,7,9&11 ஆகிய இடங்களில் வாசம் செய்யும்போது நற்பலன்களை வாரி வழங்குகிறார். மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இந்த குருப் பெயர்ச்சியினால் நன்மையடைவர்.
அடுத்த குருப் பெயர்ச்சி நிகழும்வரை இங்கே தரப்பட்டுள்ள பலன்களை அனைவரும் கருத்தில் கொண்டு கவனத்துடன் செயல்பட வேண்டும். அனுகூலமற்ற ராசிக்காரர்கள், கீழே தரப்பட்டிருக்கும் பரிகார பூஜைகளைத் தவறாமல் செய்து வந்தால், நலம் பெறலாம். மேலும் கீழே தரப்பட்டிருக்கும் குரு ஸ்தலங்களுக்கு, விஜயம் செய்து குருபகவானைத் தரிசிக்கவும்.
குரு ஸ்தலங்கள்:
- தஞ்சை மாவட்டம் வலங்கிமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி.
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித் துறை
- நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியறை
- தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோயில்
- சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம்
- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திட்டை
மேற்குறிப்பிட்ட குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தாலும்சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தாலும் அல்லது’
வீட்டிலிருந்தபடியே
“ வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹ்ஹே
தந்நோ: குருப்ரசோதயதயாத்
என்று குருபகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தாலும் குரு பகவானால் ஏற்படகூடிய அசுப பலன்கள் குறையும். வியாழக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று, தட்சிணாமுர்த்தியை கொண்டக் கடலை மாலையிட்டும், மஞ்சள் மலர் மாலை சாத்தியும், நெய் தீபமிட்டு வணங்குவதும் சிறந்தது.
இங்கே தரப்பட்டிருக்கும் பலன்கள் அசுப பலன்களாக இருந்தால் அதை எண்ணிக் கவலைப்படவென்டாம். நீங்கள் அதைக்கண்டு அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், இந்த குருப் பெயர்ச்சிக்குத் தரப்பட்டிருக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை ஆதாராமாகக் கொண்டவை.
(அ). உங்கள் ஜாதகப்படி உங்கள் திசா புத்தி உங்களுக்கு சாதகமாக இருந்து, இந்த கோச்சாரப்படியுமதஷ்டம் உங்களுக்கு அமோக இருக்கும்.
(ஆ)ஜாதகப்படி நல்ல அமைப்பு இருந்து கோட்சாரம் சரியில்லையென்றால், அந்த குறிப்பிட்டகோட்சார காலத்திற்கு மட்டும் நல்ல பலன் பலன் குறைவாக நடைபெறும்.
(இ). ஜாதக பலன் நன்றாக இல்லாமல் கோட்சாரம் சிறப்பாக இருந்தால், நல்ல பலன் குறைவாக நடைபெறும்.
(ஈ): ஜாதகப்பலன் கோட்சார கோட்சாரப் பலன் இரண்டும் தீமை தருவதாக இருந்தால், அதிக கெடுபலன்களே நடைபெறும்.
எனவே உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளவும்.
இனி உங்கள் ராசிக்குரிய பலன்களைப் படித்து அறியுங்கள்.
வாழ்க வளமுடன்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments