குரு பெயர்ச்சி பலன் 2013 | guru peyarchi palan 2013 | மே மாதம்
குருப் பெயர்ச்சிப் பலன்கள் மே 2013:
வருகிற விஜய வருடம் மே மாதம் 27-ம் தேதியன்று நண்பகல் 12 மணியளவில் குருபகவான் தான் இப்போதிருக்கும் ரிஷப ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மிதுன ராசியில் பிரவேசிக்கிறார். குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து 2,5,7,9&11 ஆகிய இடங்களில் வாசம் செய்யும்போது நற்பலன்களை வாரி வழங்குகிறார். அதன்படி, இந்த குருப் பெயர்ச்சியின்மூலம் ரிஷபம், சிம்மம் , துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் பலனடைவார்கள். ஏனையோர் கீழே தரப்பட்டிருக்கும் பரிகார பூஜைகளைத் தவறாமல் செய்து வந்தால், நலம் பெறலாம். மேலும் கீழே தரப்பட்டிருக்கும் குரு ஸ்தலங்களுக்கு, விஜயம் செய்து குருபகவானைத் தரிசிக்கவும்.
குரு ஸ்தலங்கள்:
- தஞ்சை மாவட்டம் வலங்கிமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி.
- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித் துறை
- நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியறை
- தூத்துக்குடி மாவட்டம் திருசெந்தூரில் உள்ள சுப்ரமணியசாமி திருக்கோயில்
- சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம்
- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திட்டை
மேற்குறிப்பிட்ட குரு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தாலும், சிவாலயங்கலில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தாலும் அசுப பல்ன்களின் தாக்கம் பெரிதும் குறைய வாய்ப்புண்டு. வெளியில் எங்கும் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே கீழ்க்கணட குருபகவானின் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். எந்த துன்பமும் ஏற்படாது.
“ வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹே
தந்நோ: குருப்ரசோதயாத்
என்று குருபகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தாலும் குரு பகவானால் ஏற்படகூடிய அசுப பலன்கள் பெருமளவு குறையும்.
இங்கே தரப்பட்டிருக்கும் உங்கள் ராசிக்குரிய பலன்கள் அசுபலன்களாக இருந்தால் அதை எண்ணிக் கவலைப்படவென்டாம். ஏனென்றால், இந்த குருப் பெயர்ச்சிக்குத் தரப்பட்டிருக்கும் பலன்கள் கீழே தரப்பட்டுள்ள விதிகளை ஆதாரமாகக் கொண்டவை.
(அ). உங்கள் ஜாதகப்படி உங்கள் திசா புத்தி உங்களுக்கு சாதகமாக இருந்து, இந்த கோச்சாரப்படியும் நற்பலன்களே நடந்தால், அதிர்ஷ்டம் உங்களுக்கு அமோக இருக்கும்.
(ஆ)ஜாதகப்படி நல்ல அமைப்பு இருந்து கோட்சாரம் சரியில்லையென்றால், அந்த குறிப்பிட்ட கோட்சார காலத்திற்கு மட்டும் நல்ல பலன் குறைவாக நடைபெறும்.
(இ). ஜாதக பலன் நன்றாக இல்லாமல் கோட்சாரம் சிறப்பாக இருந்தால், அந்த காலக்கட்டத்தில் நல்ல பலன் குறைவாக நடைபெறும்.
(ஈ) ஜாதகப்பலன் கோட்சார கோட்சாரப் பலன் இரண்டும் தீமை தருவதாக இருந்தால், அதிக கெடுபலன்களே நடைபெறும்.
எனவே உங்கள் சுய ஜாதகத்தை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளவும்.
இனி உங்கள் ராசிக்குரிய பலன்களைப் படித்து அறியுங்கள்.
ராசி வாரியாக குரு பெயர்ச்சி பலன்கள்
.
வாழ்க வளமுடன்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments