மீனம்:
பூரட்டாதி(4;உத்திரட்டாதி; ரேவதி ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:
இந்த வருடம் மே மாதம் 27-ம் தேதியன்று குருப்பெயர்ச்சியாகும்போது குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு உங்கள் சுகஸ்தானத்தில் பிரவேசிக்கிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் பிறவி ஜாதகப்படியும் அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள்.
உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
இப்போது உங்களுக்கு குருபலம் இல்லையென்பதால், திருமண விஷயங்கள் தள்ளிப்போகும். ஆனால் ஜென்ம ஜாதகத்தின்படி திருமணத்திற்கான தசாபுத்திக்காலம் சிறப்பாக அமைந்துவிட்டால், திருமணம் முடியலாம்.ஆனால் பணம் புரட்ட முடியாமல் போவதால் , பலவித சங்கடங்கள் உருவாகலாம். கணவன்- மனைவிக்கிடையில் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படும். சிலருக்கு குழந்தைப்பேறு தாமதமாகும்.
சிலருக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைகளை முன்னிட்ட பொறுப்புகளும் செலவுகளும் தீவிரமாகி சஞ்சலப்படுத்தலாம். வாரிசுகளுடைய கவனக்குறைவு, அலட்சியப்போக்கு ,முரட்டுக்குணம் , வேண்டாத சகவாசம் ஆகியவையும் உங்களை வாட்டும். பிள்ளைகளின் முன்னேற்றங்களில் ஏற்படும் முட்டுக்கட்டைகள், சுபகாரியங்களுக்கான தடங்கல்கள் வேலைவாய்ப்புகளுக்காக அல்லாடுதல் போன்றவையும் உங்களை வாட்டி வேதனைப்படுத்தும். சிலபேர் முழு நேரத்தையும் பிள்ளைகளுடன் பிரச்சினை பண்ணுவதிலேயே கழிப்பீர்கள். நன்றாக சம்பாதிக்கிற பிள்ளைகள் நம்மைக் கவனிக்கவில்லையே என்கிற குறையும் உங்களை உறுத்திக்கொண்டிருக்கும். புத்திரகாரகனான குருவின் சாதகமற்ற நிலை இப்படியெல்லாம் படுத்தும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமம். வேலியப்பளு அதிகமாக இருக்கும். உடனே கிடைக்கவேண்டிய சலுகைகள் தள்ளிப்போகும்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும்.
பெண்களுக்கும் பொறுப்புகள் அதிகமாகி அலைக்கழிக்கும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் உங்களை ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சச்சரவுதான் வரும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு விலல்ங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக முடியாமல் போகும்.
பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
குருவின் வக்கிர சஞ்சாரம்:
14.11.13.முதல் 12.3.14 வரை குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். இந்த்க் காலக் கட்டத்திலும் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. உடல் வலிமையும் உற்சாகமும் சற்றுக் குறையும். முன் கோபமும் பிடிவாதமும் அறவே குறைக்கவேண்டும். புத்திரர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு கள் கிடைப்பதில் தாமதமாகும். நீண்ட அலைச்சல்களுக்குப் பின் கொடுத்த கடன் வசூலாகும்.
அசுப பலன்களாக சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் விட வேண்டாம். மீன ராசிக்காரர்களுக்கு பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் பலன் இது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஜாதக அமைப்புகள் வேறுபடும். அதன்படி வித்தியாசம் இருக்கும் .உங்கள் ஜாதகத்தின்படி, உங்கள் திசா புத்தி சாதகமாக இருந்து, கிரக நிலைகளும் பலம் கொண்டு அமைந்திருந்தால், இங்கு தரப்பட்டிருக்கும் அசுப லன்கள் வெகுவாகக் குறைந்து விடும். அதனால், நீங்கள் உங்கள் சுய ஜாதகத்தை பரிசீலித்துக்கொள்வது நல்லது.
பரிகாரம்:
சனிக்கிழமையன்று சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மாலையும் கொண்டக்கடலை மாலையும் சாற்றி வழிபடவும். ஒருமுறை கடைய நல்லூர் சென்று அங்கு வீற்றிருக்கும் வாலில் மணி கட்டிய அபயஹஸ்த ஆஞ்சநேயருக்கு துளசிமாலையும் வடை மாலையும் சாற்றி பொறி கடலை அவலுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் படைத்து நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வரவும். துயர் நீங்கும்.
வாழ்க வளமுடன்!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments