/* ]]> */
May 052012
 
மீனம் ராசி

  குரு பெயர்ச்சி பலன் மே 2012 மீன ராசி Meena rasi guru peyarchi palan may 

 

மீனம் ராசி

மீனம் ராசி

 

மீன ராசி:

.பூரட்டாதி(4); உத்திரட்டாதி; ரேவதி:

வருகிற மே மாதம் 17-ம் தேதியன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அதாவது ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த சஞ்சாரம் கோச்சாரப்படி சரியில்லை யென்றாலும்கூட  .இருப்பினும் க்ரு தனது புனிதமான பார்வைகளால் உங்களுக்கு சில நன்மைகளைச் செய்யத் தவற மாட்டார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தை தனது 5-ம் பார்வையாலும், 9-ம் இடத்தை 7-ம் பார்வையாலும், 11-ம் இடத்தை தனது 9-ம் பார்வையாலும்பார்த்து அந்த இடங்களை மேன்மையடையச் செய்கிறார்.

குருவின் பார்வை பலன்கள்:

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் விழும் குருபார்வை உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத்துணைப்  இதுவரை பாதித்து வந்த பிணி நீங்கும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார்.  திருமண்மாகாதவர்கலுக்கு திருமணம் ஆகும்.  கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு மிளிரும்.  இதுவரை இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். சிலருக்கு கூட்டுத் தொழில் சிறக்கும். தொழிலுக்கு நல்ல கூட்டாளி கிடைப்பார். சிலருக்குப் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு சில உதவிகள் கிடைக்கும். சிலருக்கு மனைவி மற்றும் மனைவிவழி உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிலர் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாலும்கூட சிலருக்கு திடீர் என்று பண வரவுகள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்.    உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் விழும் குரு பார்வையால், உங்கள் தந்தை மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். ப்திய ஆடைகள் வாங்குவீர்கள். வெளியிடங்கலில் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். ஆனால் வீட்டில் அது கிடைக்காமல் போகும்.  குரு பகவான் தன்னுடைய புனிதமான 9-ம் பார்வையால், உங்களுடைய 11-ம் இடத்தைப் பார்வதால், இதன் பலனாக நல்ல வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால் அவை அனைத்தும் அவசிய காரியங்களுக்கு பயன்படாமல், விரயமாகும். சிலருக்கு மனைவழிப் பூர்வீகச் சொத்தின்மூலம் கிடைப்பதற்காஅன் வாய்ப்புகள் உண்டு.உங்கள் தந்தையும் தந்தை வழி உறவினர்களும் கை கொடுக்க தய்ங்க மாட்டார்கள்.  இனி குரு பகவானின் மூன்றாம் இடப் பெயற்சியால் உண்டாகும் அனுகூலமற்ற பலன்களைப் பார்க்கலாம்.

மன ஊக்கம் அவ்வப்போது மழுங்கிவிடும். உடம்புத் தெம்பும் குறையக்கூடும். துடிப்பான வேகத்துடன் செயல்படாமல், அடிக்கடி தயக்கத்துடனும், தளர்ச்சியுடன் தாமதத்திற்கு இடம் கொடுத்துவிடுவீர்கள். தைரியமாகவும், துணிச்சலுடனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தி குறைந்திருக்கும். அலுப்பு, சலிப்பு, கைகால் உளைச்சல் ஏற்படுவதால் ஆரோக்கியமும் குறைந்துவிடும். சிறுசிறு அசௌகரியம் அவ்வப்போது வந்து வந்து போகும். கொலாஸ்ட் ரல், சர்க்கரை வியாதி இவைகள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும். உடல்நலம் படுத்தவே செய்யும். குறைவான அளவில் வரும் வருமானம் பற்றாக்குறையை ஏற்படுத்தி படுத்தி வைக்கும். வருகிற பணமும் சமயத்துக்கு வராமல் இழுபறியாகும். தன ஸ்தானத்தில் பதியும் அஷ்டம சனியும் இதைத் தூண்டிவிடும்.

குருபலம் இல்லாவிட்டாலும்கூட குருவின் ஒரு சுபப் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மீது வீசி திருமண யோகத்தைக் கொடுக்கத் தவற மாட்டார். குழந்தைகளுக்கான கல்வி, வேலை வாய்ப்பு முதலியவைகளுக்கு சிரமப்பட நேரும். வளர்ந்து வருகிற பிள்ளைகள் பெற்றோரை அனுசரித்து நடந்துகொள்ளாமல், முரட்டுத்தனம் காட்டுவதும் உங்களை எரிச்சலூட்டலாம். போதுமான அளவு ஒத்துழைக்காத பிள்ளைகளால் உங்கள் பொறுமை சோதிக்க[ப்படலாம். வாரிசுகள் சம்பந்தமாக எப்படியும் வாட்டமே மிஞ்சும். உணவிலும் கட்டுத்திட்டங்கள் இருக்கவேண்டும். தனிப்பட்ட ஆசாமிகளை நம்பி சீட்டுப்ப்பணம் கட்டினால், பணம் ஸ்வாஹா!.

பணமும் இல்லாமல் எப்போதும் வாட்டமான முகத்துடன் காணப்படும் உங்களை விட்டு எல்லோரும் விலகி ஓடுவர்.

குருவின் வக்கிரகால நிலை:

குரு 5.10.12. முதல் 29.1.13.வரை (3 மாதங்கள் 24 நாட்கள்) ரிஷப ராசியிலேயே வக்கிரமாகிறார். சுபக் கிரகமான குரு பொதுவாக கெடுபலன்களைத் தரக்கூடிய இடத்திலே வக்கிரமானால், அந்த வக்கிர காலத்தில் மூன்றாமிடத்தில் குரு தரக்கூடிய பொதுவான கெடுபலன்கள் நடைபெறாமல் , மாறாக செல்வமும்,சுபிட்சமும் ,சுபமும் ,சௌகரியமும் நடைபெற சாத்தியம் உண்டு .

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மாலையும் கொண்டக்கடலை மாலையும் சாத்தி வழிபடவும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி வழிபடவும்.  துன்பம் விலகும்.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>