/* ]]> */
Apr 302011
 

ரிஷபம்

ரிஷப ராசிரிஷப ராசி 

உங்களுக்கு கடந்த ஐந்து மாத காலமாக அதாவது, கடந்த டிஸம்பர் முதல் இந்த ஏப்ரல் மாதம் வரை உங்க காட்ல மழைன்னு சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்தீர்கள். இப்போது, வருகிற 8.5.2011அன்று ஏற்படும் குருப்பெயர்ச்சியால், குரு உங்கள் ராசிக்கு 12ம் இடத்துக்கு வருகிறது. இது விரய ஸ்தானமாதலால் அவ்வளவு விஷேஷமில்லை. குரு பெயர்ச்சியான ஒரு மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி வருகிறது. ஜென்ம கேதுவாகவும் ஏழாமிடத்து ராகுவாகவும் வந்து சேர்வதும், 26.6.2011 அன்று ஐந்தாமிடத்து சனி வக்கிர நிவர்த்தியாவதும் வச்சுப் ப்ர்க்கும்போது, கொஞ்சம் படுத்தல்கள்தான் காணப்படும். மேலும் இப்போது குரு பகவான், உங்க ரசிக்கு நாலாமிடத்தையும், ஆறாமிடத்தையும், எட்டாமிடத்தையும் பார்வை செய்வதும் சிறப்பாகாது. அனாவசியப் பிரச்சினைகளும், தேவையற்ற சிக்கல்களும் வரும். வருமானம் குறையும். செலவுகள் அதிகமாகும். சுப காரியங்கள் தள்ளிப் போகும். உங்க வாயாலேயே பல தொல்லைகள் வரும். அதனால் பேச்சைக் குறைச்சுக்கணும். உங்க சுக சௌக்கியங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. உடல்நலம் குறையும்; மருத்துவ செலவுகள் அதிகமாகும். பணம் தண்ணியா கரையும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் ஏதாவது பிரச்சினைகள் வருவதற்கும், மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவதும் நேரும். எந்த ஒரு காரியத்தையும் முழுசா முடிக்க முடியாது. குடும்பத்திலும் ஏதாவது குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். இந்த காலக் கட்டத்தில் உறவினர்கள் விரோதம் அடைவதற்கும், நண்பர்கள் மனஸ்தாபம் அடைவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத வழக்கு, கோர்ட், கேஸ்ன்னு அலைய வேண்டியிருக்கும். நீங்க யாருக்கும் எந்த வாக்குறுதியும் முன் ஜாமீனும் கொடுக்க வேண்டாம். இந்த சமயத்தில் ஒரு சிலருக்கு அரசாங்கத்திலிருந்துகூட ஏதாச்சும் தொல்லைகள் வரலாம். அரசாங்கத்திலிருந்து ஆக வேண்டிய காரியங்கள் இப்போது தள்ளிப் போகும். இரண்டு மடங்கு பணம் செலவு செய்தாலும் காரியம் உருப்படியா முடியாமல் கழுத்தறுக்கும். எதிரிகளின் சூழ்ச்சியால், வீண் கெட்ட பெயர் வரவும், வீண் பழிச் சொல்லுக்கும் வழி உண் டாகும். மகன், மகளுக்காக சிலர் தண்டச் செலவுகள் செய்யவேண்டியிருக்கும். பல வகையில் , பலவித பிரச்சினைகள் வீடு தேடிவந்து உங்களை டென்ஷனாக்கும். இந்த கெடு பலன்கள் குரு பகவானின் வக்கிர காலத்தில் அதாவது 31.8.2011 முதல் 25.12.2011வரை மாறும். அதாவது மிக நல்ல பலன்களாக நடக்கும். உங்கள் நிலை தலைகீழாக மாறிடும். படுசூப்பரான காலக் கட்டமா இது மாறிடும். அதாவது, இதுவரைக்கும் நீங்க அனுபவிச்சு வந்த கெடு பலன்களுக்கெல்லாம், இப்போது விமோசனம் கிடைக்கும். வேலை தேடி அலுத்துப் போனவங்களுக்கெல்லாம், இப்போது வேலை கிடைச்சுடும். ஏற்கெனவே செய்து வரும் தொழில், வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். பண நடமாட்டம் அதிகமாகும். தடையான சுப நிகழ்ச்சிகள் இப்போது நடைபெறும். புதிய முயர்ச்சிகள் வெற்றியடையும். தொட்டது துலங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பில் கூட்டுத் தொழில் ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு புகழ், கௌரவம், அந்தஸ்து இவை கூடும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும். அதன்பிறகு, 26.12.2011முதல் குரு வ்க்கிர நிவர்த்தி ஆகிவிட்ட பிறகு நிலைமை தலைகீழாகிவிடும். இந்த காலக் கட்டத்தில் குரு விரய ஸ்தானத்திற்கு வந்து விடுவதால், மீண்டும் திடீர் செலவுகளும், தேவையற்ற பிரச்சினைகளும் தலை தூக்கும். எல்லா விஷயங்களிலும் குழப்பமான சூழ்நிலை நிலவும். உழைப்பு கூடுதலாகவும், ஊதியம் குறைவாக�
��ும் இருக்கும். பெண்களுக்கு, கலைஞர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு, மாணவர்களுக்கு என்று அனைவருக்குமே இது உகந்த காலமல்ல. குரு வக்கிரமடையும்போது மட்டுமே கொஞ்சம் மூச்சு விட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் இதே நிலைதான். எந்த விஷயத்திலும் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்:-

புதன், சனி இரண்டும் அதிர்ஷ்ட தினங்களாகும். வைரக்கல் ராசியான அதிர்ஷ்டக் கல்லாகும். வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட கலராகும். பிரதி வெள்ளிக் கிழமை அம்மனுக்கு நெய் விளக்கு
போட்டு வருவது நன்மை பயக்கும்.
*********

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>