/* ]]> */
Oct 262020
 

குரு பெயர்ச்சி பலன்கள்- நவம்பர்  2020-

guru 20

தனுசு  ராசி:

தனுசு ராசி

தனுசு ராசி

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி – 15.11.2020 அன்று இரவு 2.55 க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 (20/11/2020) கார்த்திகை மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சின்போது  குரு பகவான் உங்கள்  ராசிக்கு இரண்டாம் இடமான துலா ராசியில்  சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கஷ்டங்களும்  வேதனைகளும் இருந்து வந்த நிலை மாறி, இனி நல்ல காலம் பிறக்கும்.  சிம்மத்துக்கு வருகிற குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில்  1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான  5-ம் பார்வையால்,  உங்கள் 6-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய 8-ம் இடத்தையும் ,தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 10-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன் காரண்மாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்..

இரண்டாம் வீடு என்பது தன, குடும்ப, வாக்கு ஸ்தானம் ஆகும். பொதுவாக குரு பகவான் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமோக வெற்றி கிட்டும்என்றும்,வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும் என்றும்,எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நல்ல லாபம் கிட்டும் என்றும் அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்றும் கூறலாம்.
இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களெல்லாம் மாறிவிடும். குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரித்த காலத்தில் நீங்கள் எவ்வளவெல்லாம் கஷ்டப்பட்டீர்களோ அதற்குச் சமமான யோக பலன்களை இப்போது அவர் உங்களுக்கு வழங்குவார். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார். தடைகள், தாமதங்கள், இடையூறுகள், இழுபறிகள் போன்றவை விலகி நிற்கும்.  தடைகள் உங்கள் பக்கமே வராது. எந்த வேலையைத் தொடங்கினாலும் முட்டுக்கட்டை ஏற்படாமல் எளிதாகச் செய்து முடிக்க முடியும். மனதில் தைரியமும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.
இந்தக் குருப் பெயர்ச்சியினால் உங்களுக்கு சகல  சம்பத்தும் கிடைக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
இதுவரை வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிட்டும். சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு  இப்போது அதற்கான சூழ்நிலை உருவாகும். கலைஞர்களுக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவார்கள். எதையும் சிரமமின்றி செய்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.  உங்களுடைய பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் எப்போதும் தாராளமாகக் காணப்படும். ஆசைப்படும் பொருட்களை உடனுக்குடன் வாங்க முடியும். வராது என்று நினைத்து கைகழுவிவிட்ட பணம் கூட இப்போது வந்து சேரும். எதிர்பாராத பண வரவுகளு ஏற்படும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு  உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை  காலம் அறிந்து நிறைவேற்றி  வைப்பீர்கள்.  இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
இப்போது குரு பகவான் தன்னுடைய சுபாவத்தை வெளிப்படுத்தக்கூடிய இரண்டாம் இடத்துக்கு வருகை தந்து ‘குருபல’த்தையும் சுபத் தன்மையையும் ஏற்படுத்துவதால்,  இதுவரை தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் கூடி வரும். குருபகவானின் கருணையால திருமண சுப காரியமும் நல்லபடியாக முடியும். வாரிசுகளின் சுபகாரியங்களும் இனிதே நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாட்டம் விலகி இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  பிள்ளைகளின் கலவி, வேலை வாய்ப்பு முதலியவை இனிது முடியும். ஏற்கெனவே அரைகுறையாக சம்பாதித்ததால் உங்களுக்கு உதவ முடியாமல் இருந்த  பிள்ளைகள்  இப்போது கைநிறைய சம்பாதித்து உங்களுக்கு போதுமான அளவு உதவலாம். கோபதாபம் என்று முறுக்கிக்கொண்டிருந்த வாரிசுகளெல்லாம் இப்போது மனம் மாறிஉங்களிடம் அன்பும் ஆதரவும் காட்டலாம்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.  மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும்.  அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள்.  புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.  சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும்  பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை, புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்கள், முக்கிய புள்ளிகள், பிரபலமானவர்கள், மேலிடத்துவாசிகள், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், அதிகார பதவி வகிப்பவர்கள் ஆகியவர்களுடைய சந்திப்பு, சலுகை, ஆதரவு, பக்கபலம் என்றெல்லாம் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர்  மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு ஏற்படுவது மட்டுமின்றி விரயச் செலவும் குறையும்.  மனம் மகிழும் செலவுகளான புதிய நகைகள் வாங்கும் நேரம் வரும். அடகு நகைகளை மீட்பீர்கள்.  புதிய ஆடைகளையும் வீட்டுக்குத் தேவையான நவீன பொருட்களையும்  வாங்குவீர்கள். புதுமையான கண்டுபிடிப்புகள், கலைநுட்பமான தயாரிப்புகள் என்று ஆசைக்கும் ரசனைக்கும் ஏற்ப அநேகப் பொருட்களும் வந்து சேர்ந்து,  உங்களுடைய வீட்டு சௌகரியங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.
இனிமேல் நீங்கள் சிரமமான வாடகை வீட்டைக் காலி செய்யலாம்.  வேறு வசதியான வீட்டுக்குக் குடி போகலாம். வீடு அடமானத்தில் இருந்தால் மீட்கலாம். வில்லங்கத்தில் இருந்தால் சரிப்படுத்தலாம். சொந்தமாக மனை வாங்கலாம். ஏற்கெனவே வாங்கி திடலாக இருந்த இடத்தில் வீடு கட்டலாம். அரையும் குறையுமாக   நின்றுபோன கட்டுமான வேலைகளை தொடர்ந்துசெய்து முடிக்கலாம். கட்டியோ விலைக்கு வாங்கியோ சொந்த வீட்டுக்கு குடி போகலாம். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. ஆடு-மாடு, கால்நடைகளை விருத்தி செய்து கொள்ளலாம்.
இதுவரை பணத்தை முன்னிட்டு இருந்த கடன்சுமை, கவலை, கஷ்டம் நாணய பாதிப்பு  நம்பிக்கை மோசம், இழப்பு, ஏமாற்றம் இடைஞ்சல், விவகாரம், வழக்கு, பிக்கல் பிடுங்கல்கள் இவை மாறிவிடும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும்.  தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கட்ன்கள் அடைபடும். புதிதாக வங்கிக்கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள்  உங்களுக்கு எதிராக  செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய  மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் நீங்கி மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன்   எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள்.  இதுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.
பெண்கள் தங்கள் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் பெறுவர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணக் கனவுகள் இனிதே நிறைவேறும்.

குருவின் வக்கிர சஞ்சாரம்:

தனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆனி மாதம் குரு பகவான் வக்ர கதியில் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். இதே போல குரு பகவான் ஐப்பசி மாதம் 30ம் நாள் 15.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேர்கதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு சனியின் ராசியின் வீட்டில் அமர்ந்து ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை மாலை 6:01 மணிக்கு நகருவதன் மூலம் மகரத்திலிருந்து கும்பத்திற்குள் நுழைகிறது. செப்டம்பர் 15 புதன்கிழமை வரை இந்த நிலையில் இருந்து பின்னர் வக்ர நிலை தொடங்குவார் மீண்டும் 4:22 மணிக்கு மகரத்திற்குள் நுழைவார்கள்

குரு உங்கள் ராசியின் வீட்டில் தனுசு ராசியில் அதிபதியும், உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும். இந்த ஆண்டு குரு ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 15 வரை உங்கள் மூன்றாவது வீட்டில் இருக்கும், இது பல குறுகிய பயணங்களுக்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பளிக்கும். நீங்கள் ஒரு யாத்திரைக்கு செல்ல வேண்டிய வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் இளைய உடன்பிறப்புகளின் அன்பை நீங்கள் பெறுவீர்கள் மற்றும் அவர்களுக்கு எல்லா ஆதரவையும் அளிப்பீர்கள். தாயின் உடல்நிலை பலவீனமாக இருக்கலாம், எனவே அவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். நிதி வாழ்க்கையில் உங்கள் தனிப்பட்ட முயற்சிகளைத் தொடருங்கள், அப்போதுதான் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள்.

செப்டம்பர் 15 ஆம் தேதி, குரு உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் அமர்ந்திருப்பார், இது குடும்பத்தில் பதற்றத்திற்குப் பிறகு சிறிது அமைதியைக் கொடுக்கும். உங்கள் சொத்துகளில் ஒன்றை வாடகைக்கு விட முயற்சிக்கலாம். நீங்கள் தாயிடமிருந்து நன்மை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் அனுதாபம் தெரிவிப்பீர்கள். இந்த நேரத்தில் ஒரு நல்ல உணவை சாப்பிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதற்குப் பிறகு, நவம்பர் 20 ஆம் தேதி, குரு பகவான் மீண்டும் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருக்கும்போது, ​​நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் சோம்பலை வளர்க்கும் வாய்ப்பு உள்ளது, இதனால் ஒவ்வொரு பணியிலும் நீங்கள் தடையாக உணருவீர்கள். மத நடத்தை அதிகரிக்கும், ஆனால் வருமான மொத்தம் உருவாகும். இளைய உடன்பிறப்பாக பழகுவர், அவர்களுடன் ஒரு பயணம் செல்ல வேண்டியிருக்கும்.

.வக்கிர சஞ்சாரத்தின்போது, முடிவுகள் தவாறாக எடுப்பதால், சிரமம் உண்டாகும். வக்கிர குரு மனதை தத்துவார்த்த ரீதியில் வழிநடத்துவார். சில ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். ஆரோக்கிய சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படும்

பரிகாரம்சுக்லா பக்ஷவில் புக்ராஜ் ரத்தினத்தை உங்கள் ஆள்காட்டி விரலில் போடவும்.

பரிகாரம்:
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும்  பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் நற்பலன்கள் அதிகரிக்கும். பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று பகவானைத் தரிசித்து வரவும்.சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்.
வாழ்க வளமுடன்!
###################.

[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>