/* ]]> */
Oct 262020
 

குருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2020

guru 20

மேஷ ராசி:

மேஷம் ராசி

மேஷம் ராசி

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி – 15.11.2020 அன்று இரவு 2.55 க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 (20/11/2020) கார்த்திகை மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகிற குருப் பெயர்ச்சின்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.    பொருளாதார நிலை சுமாராக இருக்கும். நீங்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதன் காரணமாக தேவைக்கான வருமானம் இருக்கும். கடுமையாக முயற்சி செய்து உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்களில் பல சிரமங்கள் இருந்தாலும், அந்த சிரமங்களையெல்லாம் தாண்டி, உங்கள் வரவு செலவுகளை மிகவும் சிறப்பாகவும் சீராகவும் கொண்டுசெல்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து நிறைவேற்றுவதால், குடும்பத்தினரின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளை சமாளித்து அமைதியான சூழ்நிலையைக் கொண்டு வருவீர்கள்.

யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் பணம் கைக்கு திரும்ப வராது. சிலர் புதிய ஆடைகளை வாங்குவார்கள். சிலர் தங்க நகைகளை அடகு வைக்க நேரலாம். தந்தை மேன்மை அடைவார்.
எதிலும் உங்களுடைய உழைப்பையும்  அதற்கான பலன்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய ஆடைகள்  வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. யாருடனும் விரோத மனப்பான்மையுடன் இருக்கவேண்டாம். பிறரை அனுசரித்து கவனத்துடன் நடந்துகொண்டால், தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு கடன் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். அதன்  காரணமாக மனதில் ஏதோ ஒரு கவலையும்  துக்கமும் இருந்துகொண்டே இருக்கும்.
உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம். குரு பகவான் பத்தில் நடமாடுவதால் ஆரோக்கியம் பெருமளவு பாதிப்படையக்கூடும். நோய் நொடிகள் அடிக்கடி வந்து சொந்தம் கொண்டாடும். உடல் பலவீனம், ஈரல் கோளாறுகள், செரிமானக் குறைவு, கொலாஸ்ற்றல் பிரச்சினைகள், சர்க்கரை வியாதி போன்றவையெல்லாம் பத்தாமிட குருவால் வரும் சோதனைகள். ஊக்கமாகவோ, தெம்பாகவோ இருக்க முடியாமல், சோர்ந்து போய் படுத்துக்கொண்டு ஏதாவதொரு நோயின் பெயரைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். நடை தளர்ந்து தள்ளாடுவது போலாகிவிடும்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி மிகுந்து போய் உங்களை  நீக்கிவிடலாமா என்று யோசிப்பார்கள். மேலிடத்துக்கு புகார் அனுப்புவார்கள். அவர்களும் காத்திருந்ததுபோல், உடனடியாக நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள்.
உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
ராகு கேது சஞ்சாரங்களின் மூலம் மனதில் செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.
இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு.  வேலைப்பளு கூடும். விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். நீங்கள் வகித்து வந்த முக்கிய பொறுப்பிலிருந்து கழற்றி விடுவார்கள்.
சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அவர்கள் கல்வியில் கவனத்தைச் சிதற விட்டு தேர்ச்சி பெற முடியாமல் கஷ்டப்படுவார்கள். வேலை வாய்ப்பு மற்றும் திருமண சுப கார்யங்கள் என்று எதிலும் அக்கரை இல்லாமலும் தோல்வியைத் தழுவியும் அல்லாடுவர். அவர்களை கடைதேற்ற முடியாமல் நீங்கள் பெரும் அவஸ்திக்கு உள்ளாவீர்கள்.
பத்தாமிட குரு,  குருபலம் தரமாட்டார். எனவே ,திருமண வாழ்விலும் நற்பலன் தர மாட்டார்.    திருமணம் நிச்சயமாகாது. நிச்சயமான திருமணமான நின்று போகும்.  ஏற்கெனவே திருமணமான தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப அமைதியை இழப்பர். சிலர் கோர்ட்டுப்படி ஏறுவதுகூட நடக்கலாம். அவரவர் திசா-புத்திப் பலன்களின்படியே அவர்களுக்கு விவாகரத்து ஆவதும் சாதாரணமாகப் பிரிந்திருப்பதும் நிகழும். பொறுமை காப்பதின் மூலம் எல்லை வரை போகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.  தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் உள்ள குழப்பங்களை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இள்ளையேல் சில விபத்துகள் கூட  ஏற்படலாம
குருபகவானின் சுபப் பார்வை பலன்கள்:
அக்டோபர்  மாதம் 11-ம் தேதி உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்துக்குச் செல்லும் குரு பகவானுடைய மூன்று சுபப் பார்வைகளுள் ஒரு பார்வை ‘பகை- ரோக -கடன்’  ஸ்தானத்தின் மீது பதிகிறது. இதனால் கடன் வாங்கிச் சில அவசியமான கடமைகளைச் செய்யும்படியாகும். அத்தோடு கடன் பிரச்சினைகள் கஷ்டம் கொடுக்காதபடி சமாளித்துக்கொள்ளவும்முடியும். எதிர்ப்புகளைத் தாக்குப்பிடிக்கவும் விவகாரங்களிலிருந்து தப்பிக்கவும் நோய் நொடிகளிலிருந்து குணப்படுத்திக்கொள்ளவும்கூடஇந்தக் குரு பார்வை ஒத்துழைக்கும்.  குரு பகவானின் மற்றொரு பார்வை ‘தன- குடும்ப-வாக்கு’ஸ்தானத்தின்மீது பதிகிறது. இதனால் குடும்பத்திற்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைத்துவிடும். குடும்பம் தொல்லையின்றி ஓடிக்கொண்டிருக்கும். பேச்சுவார்த்தைகளையும் சாதுரியமாகப் பேசி நிலைமையைச் சமாளித்துக்கொண்டு வரலாம்.  குரு பகவானின் மற்றொரு பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது. அதனால் கல்வி விருத்தி உண்டு; வீட்டுக்குத் தேவையான சௌகரிய உபகரணங்கள் சேரும். வீட்டு வசதி எப்படியாவது அபிவிருத்தி அடைந்துகொண்டிருக்கும். சிலர் கடன் வாங்கியாவது வீடு கட்டவோ, வீட்டை புதுப்பிக்கவோ செய்வார்கள்.சில வசதிகளையும் செய்வார்கள். தாயார் அல்லது உறவிர்கள் நண்பர்களுடைய ஒத்தாசை கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளும் சந்திப்புகளும் பழக்க வழக்கங்களும் அனுகூலமாகும்.
குருவின் வக்கிர சஞ்சாரம்:

குரு வக்கிரம்;

தனுசுவில் இருந்து மகரத்திற்கு குரு நிகழும் மங்களகரமான சார்வரி வருஷம் ஆனி மாதம் குரு பகவான் வக்ர கதியில் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நகர்கிறார். இதே போல குரு பகவான் ஐப்பசி மாதம் 30ம் நாள் 15.11.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேர்கதியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் ஏழாம் பார்வையால் கடக ராசியையும் ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் நவம்பர் 20ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு செல்கிறார். 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குரு சனியின் ராசியின் வீட்டில் அமர்ந்து ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை மாலை 6:01 மணிக்கு நகருவதன் மூலம் மகரத்திலிருந்து கும்பத்திற்குள் நுழைகிறது. செப்டம்பர் 15 புதன்கிழமை வரை இந்த நிலையில் இருப்பவர், பின்னர் வக்ர நிலை தொடங்குவார் மீண்டும் 4:22 மணிக்கு மகரத்திற்குள் நுழைவார்.. அதன் பிறகு அவர் மீண்டும் நவம்பர் 20, சனிக்கிழமை காலை 11:23 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசியில் நுழைவார்.

குரு பெயர்ச்சி 2021 மேஷ ராசியில் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாக ஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 15 வரை உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள், ஏனெனில் நிதி ரீதியாக, இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமானது. உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வழிமுறைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பல லட்சியங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், இதனால் நீங்கள் பல வெளிநாட்டு மூலங்களிலிருந்து பயனடைய முடியும். இதற்குப் பிறகு, குரு வக்ர நிலையில் கும்பத்திலிருந்து மகரத்திற்குத் திரும்புவார், இது செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை உங்கள் ராசியின் பத்தாவது வீட்டைப் பாதிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் பணித்துறையில் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும், ஏனெனில் ஏற்கனவே இருக்கும் சனி பகவான் உங்களை குழப்பிவிடுவார்.

உங்கள் வேலையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் என்றாலும், சனி குரு பாதிப்பது உங்கள் தந்தைக்கு ஆரோக்கியத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆண்டின் இறுதியில், அதாவது நவம்பர் 20 அன்று, குரு மீண்டும் கும்ப ராசியில் அமர்ந்திருக்கும், இதனால் உங்கள் ராசியின் பதினொன்றாவது வீட்டை பாதிக்கும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சிறந்த நேரம் என்பதை நிரூபிக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் நிறைய வெற்றிகளைப் பெறுவீர்கள். மேலும் திருமண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் இந்த நேரத்தில், உங்கள் சோம்பலை முடிந்தவரை விட்டுவிடுங்கள், இல்லையெனில் இழப்பு ஏற்படும். பதினொன்றாவது வீட்டில் குரு உங்களுக்கு அதிகமான செல்வத்தைத் தரும்.

பரிகாரம்ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியேறும்போது, ​​நிச்சயமாக நெற்றியில் குங்கும பொட்டு வைக்கவும்

குருவின் 9-மிட வக்கிர நிலையால், உங்கள்  கௌரவம் மேலோங்கும். ஆனால் சுயநலமாக இருக்கவேண்டாம். மதச் சார்பான விஷயங்களில் யாரையும் புண்படுத்த வேண்டாம். அது பெருந்தொல்லையை உண்டாக்கும். சனியின் சுப சஞ்சாரம் வெகுவாகக் கை கொடுக்கும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலை மாலையிட்டு மஞ்சள் மலர் சாத்தி வழிபட்டால்,  துன்பம் விலகும். சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து  மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும்.சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும்.
########################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

 

 

 

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>