/* ]]> */
Sep 222011
 

குருந்தமலையில் குழந்தை வேலாயுதசுவாமி

 Aadi Krithigai
Kurundhamalai 

பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமான் முருகனின் 
சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத …….நாங்களும்

 

கோவை மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5கிலோ மீட்டர் தூரத்தில் அத்திகடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் குருந்தமலை கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

 

Kurundamalai Temple Visit 16Sep2011

முருகன் மலைக்கு எதிரில் அனுமன் இருக்கிறார்.

முருகன் மலையில் 125 படிகள் உண்டு. மேலே இருந்து பார்த்தால் வயல்களும் மரங்களும் காற்றும் இயற்கைசூழலில் எழில் கொஞ்ச மனம் கவரும்.
Kurundhamalai

முருகன் கோவில் திருப்பணிகள் நடந்து கொண்டு இருந்தது.
Kurundhamalai

சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகக் குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில் திகழ்கிறது. சிறிய குன்று தான். கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஐநூற்றாம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் மிளகு, கிராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை சேர நாட்டிலிருந்து வாங்கி அட்டப்பாடி, குருந்தமலை சத்தியமங்கலம் போன்ற ஊர்களின் வழியே மைசூர் சென்று வணிகம் செய்தனர்.ஒரு முறை பொதி மாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வ்ந்தபோது, இந்த குருந்தமலையடிவாரத்தில் தங்கியிருந்தனர். ஒரு சிறுவன் இந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்க அவர்கள் விளையாட்டாக தவிட்டு மூட்டைகள் என்றார்கள்.மறு நாள் மூட்டைகள் தவிடாக மாறி இருப்பதை அறிந்து இரவு வந்தது குமரன் என உணர்ந்து அந்த குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டமுடிவு செய்தனர். மீண்டும் அவர்கள் தவிட்டு மூட்டையை மிளகு மூட்டையாக மாற்றினான் சித்தாடும் செல்வகுமரன்.

16092011(010).jpg

ஐந்து நிலை கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் 
ராஜகம்பீர விநாயகர்.
சங்கடஹர சதுர்த்தி அபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

16092011.jpg
18வது படியில் கருப்பண்ணசாமி

16092011(004).jpg

அதற்கு மேலே வடக்கு நோக்கி இடும்பன். காசிவிஸ்வநாதர் கோவிலும் கருங்கல்லினாலான தீபஸ்தம்பமும். இங்கு நாகதீர்த்தம், மயில்தீர்த்தம் என்ற சுனைகள் பாசி பிடித்துப்போய் …

16092011(002).jpg

16092011(003).jpg

படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப் பட்டுள்ளது.
இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன.

காசிவிஸ்வநாதரை அடுத்து சூரியன் பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கங்கள்,
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக கல்யாண சுப்ரமணியர் சன்னதிகள்,

கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சன்னதி கிழக்குப் பக்கம் பாறையில் இயற்கையாக ஏற்பட்ட சண்முகச்சுனை, ஆறுமுகச்சுனை உள்ளன. இதுவும் பாசி பிடித்து உள்ளது. திருப்பணிகள் நடப்பதால் சுனைகள் புத்துயிர் பெற குமரன் அருள்வான்…கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் குழந்தை வேலாயுதனாக காட்சி தருகிறார்.
ராஜ கம்பீர நாடாளும் நாயகன்.

ராஜ அலங்காரத்தில் கையில் தண்டு கொண்டு பழனி முருகனை நினைவூட்டும் அருள்கோலம்.

 

அகத்திய முனிவரும் , ஆதிசேஷனும், சூரியனும் குமரனை வழிபட்டதாக குருக்கள் திரு ராமகிருஷணன் அவர்கள் தெரிவித்தார். அவரது அருமையான அர்ச்சனை மன நிறைவை தந்தது.

மார்ச் மாதம் 21,22,23 தேதிகளில் மாலை 5.30 முதல் 6.30வரை கதிரவன் தன் ஒளியால் வழிபடும் அற்புதம் காணும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் நாள் குழந்தை முருகனின் பாதத்தில் மட்டும் ஒளி தரிசிக்கலாம். இரண்டாம் நாள் இடுப்புவரையும் மூன்றாம் நாள் முருகனின் எழில் வதனம் … சிரம் தாண்டி முடியை சூரியகதிர்கள் முருகனை ஆராதனை செய்வது கண்கொள்ளாக்காட்சி. அன்று அபிஷேக ஆராதனைகள் விஷேமாக நடைபெறும்.

Sri Kaumara Chellam
அழகு தோற்றத்தில் வா வந்து எடுத்துக்கொள் என்று பிஞ்சுப்பாதத்தில் இடது பாதத்தை முன்வைத்து தத்தி நடக்கும் குழந்தையாக எழில் கோல முருகன்.
முருகன் பின்னாடி கண்ணாடி.
கர்ப்பக்கிரகத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும், மணக்குள விநாயகர் கோவிலிலும் உள்ள தீர்த்தம் போல் உள்ள சுனையை தரிசனம் செய்வித்தார் அர்ச்சகர்.
 சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு -எம்
 குழந்தைகளுக்குக்கொடுத்து உதவி புரிய தருணமிதையா..முருகா! 

 குழந்தை வேலாயுதவா…என திருப்புகழ் பாடலாலேயே
 குழந்தை வேலாயுதனை இறைஞ்சி வழிபட்டோம்..

Kurundhamalai

இந்தமலையின் எதிர்ப்புறம் உள்ள மலையில் வள்ளிதெய்வானையுடன் முருகன் அருள்கிறார்.
Kurundhamalai

Kurundhamalai
கொடிமரத்தின் பக்கத்தில் சுற்றுசுவர் அருகிலிருந்து பார்த்தால் இயற்கையை இனிமையாக ரசிக்கலாம்.
Kurundhamalai

வாழ்ந்து படிக்கும் பாடமாக அங்கே பிரசாத கடை வைத்திருக்கும் மாற்று மத பெண்.  மலை ஏற முடியாதாம். விநாயகரையும், அனுமனையும் வணங்கிவருகிறாராம். பெருந்தொகை கொடுத்து கடை வைத்திருந்தும் இத்தனை பாரம்பர்யமிக்க கோவிலில் சரியாக கூட்டம் வருவதில்லையாம்.

 

நிறைய காவடிகள் ஆடி முடிந்தவை காணக்கிடைத்தது.காவடிச்சிந்து பாடல் மனதில் ரீங்காரமிட்டது.
ஒருமுறை திருப்புகழ் பாடல்களை பிரபலமான சினிமாப்பாடல் ராகத்தில் ஆட்டத்துடன் அங்கே குழுவாக நிகழ்த்தினார்கள்.மனதில் சுலபமாக பதிந்தது.
அடுத்த நாள் திருப்புகழ் வகுப்பில் ஆசிரியர் பாடிய பாடல் ராகம் மாறி பாடமுடியாமல் திணறியது நினைவில் மலர்ந்தது.

Kurundhamalai
பௌர்ணமிதோறும் அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம்.
Kurundhamalai

Kurundhamalai

Kurundhamalai
Kurundhamalai

Kurundhamalai
Kurundhamalai
Kurundhamalai

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>