/* ]]> */
Nov 172012
 

கும்ப ராசி பலன் 2013 | புத்தாண்டு பலன் கும்பம் ராசி 2013 | kumba rasi 2013

2013 கும்ப ராசி kumba rasi

2013 கும்ப ராசி kumba rasi

கும்பம்:

அவிட்டம் (3&4),சதயம், பூரட்டாதி(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது.

{ சாதகமான காலம்:  ஆண்டின் துவக்கம் முதல்  ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை குரு வக்கிர சஞ்சாரம் சாதகமாகிறது.  மே மாதம் 27-ம் தேதி முதல், நவம்பர் மாதம் 7-ம் தேதி வரை குருவின் 5-மிட சஞ்சாரம் சாதகமாகிறது.  தவிர, கேதுவின் 3-மிட சஞ்சாரம் ஆண்டு முழுவதும் சாதகமானது.

சாதகமற்ற நிலை: ஜனவரி 31-ம் தேதி முதல் மே மாதம் 26-ம் தேதிவரை குருவின் 4-மிட சஞ்சாரம் சரியில்லை. சனி மற்றும் ராகுவின் சஞ்சாரமும் , நவம்பர் 8-ம் தேதி முதல் ஆண்டின் இறுதிவரை நிகழும் குருவின் வக்கிர சஞ்சாரமும் சரியில்லை. }

இந்த வருடம் உங்களுக்கு நன்றாக இருக்கும். அஷ்டமச் சனியின் பிடியிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.  இந்த வருடம் குருபகவான்  மே மாதம் 26-ம் தேதி வரையும் , 27-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும்  சஞ்சரிக்கப் போகிறார்.  ஏனைய கிரகங்களான  சனி பகவானும், ராகு பகவானும்  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும்  கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். இனி ஒவ்வொரு கிரக சஞ்சாரமும் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ஆண்டின் ஆரம்பத்தில்  ஜனவரி மாதம் 30-ம் தேதிவரை  வக்கிர கதியிலிருக்கும் குரு பகவான்  உங்களுக்கு நற்பலன்களை வாரி  வழங்குவார்.  உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.  வியாபாரம் சிறக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். கூட்டுத் தொழில் மேம்படும் . வெளிநாட்டு வாணிபம் சிறக்கும்.  அலுவலகத்தில் நல்ல சூழல் உருவாகும். மேலதிகாரிகள் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவர். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் , சம்பள உயர்வும் கிடைக்கும்.  பொறுப்பான பதவிக்கு மாற்றப்படுவீர்கள். திருமணத் தடை விலகி வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். கோர்ட் வழக்குகள் ஒரு முடிவுக்கு வந்து வெற்றியடையும். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கம் ஒரு முடிவுக்கு வந்து உங்கள் கைக்கு வந்து சேரும்.  பிள்ளைகளின் கல்வி ஏற்றம் பெறும். அவர்களின் வேலை வாய்ப்பு பிரகாசமாகும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு உதவுவார்கள். இப்படியாக பல நற்பலன்களை  வக்கிர குரு வாரி வழங்குவார்.

இனி,  மே மாதம் 31-ம் தேதி முதல்  உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும்  குரு பகவான் உங்களுக்கு சில தொல்லைகள் தருவார். உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். . தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக  சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்.

குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்கலுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வயதானவ்ர்களுக்கு உடல் நலம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்குபணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.  பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல்திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே  உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும்   சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர்  அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள்  தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.

சனி பகவானும் ராகு பகவானும்  உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம். தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்பப்  பணப்பழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன்மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களைத் தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கண்ட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொளவ்து அவசியம்.  இந்த காலக் கட்டத்தில் பேச்சில் நிதானம் தேவை.

ஆண்டின் பிற்பாதியில் மே மாதம் 27-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 7-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு பகவான், ஏராளமான பலன்களை வாரி வழங்கப் போகிறார். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்த  பகை, விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள்   என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை  நண்பர்கள் அணுசரணை போன்ற  சூழ்நிலைகள் ஏற்படும்.  குரு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதோடு ,  கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால்,  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள்.    ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினகள் ஒரு முடிவுக்கு வரும்.  உங்களுக்கு எதிராக இருந்துவந்த ஊழியர்கள்அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பீர்கள்.  அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.

சாதகமான கேதுவின் சஞ்சாரமும் துணை நிற்பதால், பணப் பிரச்சினையும் பொருளாதார சிக்கல்களும் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் அகன்று சங்கடங்கள்  தீரும். உங்களுடைய முயற்சிகளுக்கு தந்தையின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். இதுவரை தடைப்பட்ட திரும்ணங்கள்  நடந்தேறும். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் புகழடைவீர்கள். சிலர் சொந்தத் தொழிலை மேற்கொள்வர். இதுவரை உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள்கூட மனம் மாறி உங்களுக்கு உதவிசெய்வார்கள். மற்றவர்கள்  முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். இளைய சகோதரர் வழியில் ஒத்துழைப்பு  கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். படிப்பில் மந்தமாக இருந்த பிள்ளைகள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள்.

ஆண்டின் இறுதியில் 2 மாதங்களுக்கு குரு வக்கிர கதியில் இயங்குகிறார். இந்த வக்கிர சஞ்சாரம்  மே மாதம் 8-ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. ஆண்டின் இறுதிவரை நீடிக்கும் இந்த வக்கிர சஞ்சாரத்தின் விளைவாக, பதவிக்கு சிறு சிறு ஆபத்துகள் வரலாம்.  தொழில் புரிபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட்டால், பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர், மிகுந்த கவனத்துடன் செயலாற்றவேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டால், கூட்டாளிகளுடன் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். வேலையில் இருப்பவர்கள் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ அல்லது படிப்புக்குத் தகுந்த வேலையையோ தேடும்போது, புதிய வேலை கிடைத்த பின்பே கையிலிருக்கும் வேலையை விடவேண்டும். வேலையை விட்டு விட்டு பிறகு புது வேலை தேடினால், வேலை தேடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். புது வேலை அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மட்டுமே, தொழிலை விரிவுபடுத்த முடியும்.  பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும், கடனும் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தால் மட்டுமே மேலதிகாரிகளின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். தேவையில்லா இடமாற்றங்கள்  வரும். கணவன்-மனைவியிடையேயும், மூத்தசகோதரருடனும் பிரச்சினை தோன்றும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும்.  இப்படியாக சிறுசிறு பிரச்சினைகள் தோன்றும்.

இப்படியாக  சனி ,ராகு முதலிய கிரகசஞ்சாரங்களும் முற்பாதியில் குருவின் சஞ்சாரமும்  சரியில்லை என்றாலும், ஆண்டு  முழுவதும் சாதகமாக சஞ்சாரம் செய்யும் கேதுவும் ஆண்டின் பிற்பாதியில் குருவின் சாதகமான சஞ்சாரமும்  ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிம்மதி தருவார்கள். அஷ்டமச் சனியின் பிடியிலிருந்தும் விலகிவிட்டதால் பயமில்லை.

இது இனிய புத்தாண்டுதான்!.

பரிகாரம்:

சனியின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும்.  வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபடுங்கள் கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். குரு பகவான் ஆண்டின்  முற்பகுதியில், சரியான  சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.

இந்த 2013-ம் ஆண்டு உங்களுக்கு யோகமாக வாழ்த்துக்கள்!. வாழ்க!

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>