/* ]]> */
Feb 192020
 

குதிரைவாலி அடை-செய்வது எப்படி?

BARNYARD ADAI- RECIPE

தேவையான பொருட்கள்;

குதிரைவாலி அரிசி-1 கப்; வரகு அரிசி-1 கப்

கடலை பருப்பு -1 கப்; துவரம்பருப்பு-1 கப்; பாசிப் பருப்பு-1 கப்; வெங்காயம்-1; கேரட்-1;பூண்டு-4 பல்; காய்ந்த மிளகாய்-4; இஞ்சி-1 துண்டு; பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்; உப்பு, எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை.

செய்முறை:

குதிரைவாலி, வரகு அரிசி இரண்டையும் ஒன்றாகவும், பசிப் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒன்றாகவும் சேர்த்து, தனியே 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, பருப்பை ஒன்றாகச் சேர்த்து, பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், இஞ்சி  பூண்டு , உப்பு சேர்த்து கொற கொறப்பாக அரைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி சிறிது எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி மாவில் சேர்க்கவும்.

தோசைக் கல்லை சூடாக்கி, சிறிது நல்லெண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி, மேலே கேரட் துருவலை துருவி, ஓரங்களில் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்.

கேரட்டிற்குப் பதிலாக முருங்கைகீரையும் சேர்க்கலாம் .

தக்காளிச் சட்னி, புதினாச் சட்னியுடன் சாப்பிட சுவையான அடை தோசை இது.

******************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>