நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது குட்டிபுலி படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் அடுத்த படம் குட்டிபுலி. கும்கி புகழ் லக்ஷ்மி மேனன் குட்டிபுலி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிறிய அளவில் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் உள்ளன. சசிகுமார் லக்ஷ்மிமேனன்-ஐ விட்டு விலகி இருந்தாலும் லக்ஷ்மி மேனன் சில சமூக உரையாடல் மூலம் சசியிடம் நெருங்குகிறார் என வார இதழான விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது. அனைத்து நடிகர்களும் தங்களது படத்தின் முன்னோட்டத்தை பிரபல நடிகர்களான கமல், ரஜினி இடம் காண்பிக்கும் போது சசி ஒருவரே தனது குட்டிபுலி படத்தை தனது குரு பாலாவிடம் காண்பித்துள்ளார். குட்டிபுலி படத்தில் கம்பு சண்டை போடுபவராக நடித்து உள்ளதால் பயற்சி எடுக்க ராஜபாளையம் சென்று வந்து உள்ளார். படத்தின் இறுதி காட்சிகளும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. கதாநாயகனுக்கு இப்படத்தில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அவரது தாயார் கதாபத்திரத்தில் நடிக்கும் சரண்யாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments