/* ]]> */
Jul 092020
 

கிளிகள் எப்படி பேசுகிறது?

பேசும் கிளியகள்

கிளிகள் மூளையின் வித்தியாசமான கட்டமைப்புதான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கி அதேபோல் பேச வைக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிளிகளின் பேசும் திறன்:

மற்ற பறவைகளுக்கு இல்லாத வினோதமான தன்மை கிளிகளுக்கு உள்ளது. கிளிகள் மனிதரக்ளைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளைக்கூட பிழையில்லாமல் உச்சரிக்கும். காகம் நைட்டிங்கேல் போன்றவை பாடும் பறவைகள் என அழைக்கப்பட்டாலும் இந்தப் பறவைகளால் வார்த்தைகளை உச்சரிக்க முடியாது.

கிளிகளின் பேசும் திறன் பற்றிய ஆய்வு வெற்றி.  அமெரிக்காவின் ட்யூக் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கிளிகளின் பேசும் திறனைப் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கிக் கொள்கிறது , உள்வாங்கிய குரலையும் வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி அதே போன்று ஒலி எழுப்புகிறது எனனஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் குரல், உடற்கூறு, பிற பாடும் பறவைகளின் மூளை , உடற்கூற்றில் ( StructurL Differences) இருந்து வேறுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குரல் கற்றல் திறன்:

குரல் கற்றல் திறன் என்பது குரலை உள் வாங்கிக் கொள்ளும் திறன் ஆகும். கிளியின் மூளையில் உள்ள வரையறுக்கப்பட்ட மையம் (Difined Centers) கிளிகள் குரல்களை உள்வாங்கிக்கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  .

****************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>