/* ]]> */
Jun 092012
 
KP

 -  ,

ன் மாமா பையன் பல வருடங்களுக்கு முன்னாள் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . மில் மூடப்படவே ஒரு நாள் சொந்த ஊருக்கே வந்து விட்டான் . அந்த காலத்தில் நமக்கு தெரிந்த யாரவது ஒருவராவது மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் , மில் மூடப்பட்டது என்றெல்லாம் செய்தித்தாள்களில் நிறைய படித்திருப்போம் . இப்படி செய்தியாக எங்கோ கேட்கும் விஷயத்தை முழு நீள படமாக்கி நம் கண் முன்னே உலவ விட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் தனபாலன் பத்மநாபன் .

நாவல் போன்ற கதை , ஆனால் சினிமாவிற்கு தேவையான க்ரிப்பான திரைக்கதை இல்லையென்றே சொல்லலாம் .1957 இல் நிர்வாகத் தகராறால் தன் பார்ட்னரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பெரியவரிடமிருந்து தொடங்கும் கதை , மில்லில் வேலை பார்க்கும் கதிர் (ஹேமச்சந்திரன் ) , பூங்கோதை ( நந்தனா ) இருவரின் காதல் , நந்தனாவின் தாய் ரேணுகாவின் ஜாதி வெறி , போனஸ் தொடர்பாக முதலாளிக்கும் , தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் பிரச்சனை , மில் மூடப்படுவதால் இரண்டு தரப்பிற்கும் ஏற்படும் இழப்பு இவைகளையெல்லாம் படம் நெடுக 2007 வரை பதிவு செய்கிறது .

ஹேமச்சந்திரன் மில் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் . நந்தனாவின் கண்கள் நன்றாகவே பேசுகின்றன . படத்தின் தலைப்பிற்கேற்ப பஞ்சாலையை பிராதனப்படுத்தி இவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் உலவ விட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மனதில் பதியவில்லை . படம் நெடுக ரேணுகாவை பக்கத்து சீட்காரர் திட்டிக் கொண்டேயிருந்தார் , அவர் இறந்தவுடன் சந்தோசப்பட்டார் . அலட்டிக் கொள்ளாமல் தன் நெகடிவ் தனத்தை அழுத்தமாக பதிவு செய்ததே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி .

மில் முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா , கேன்டீன் வைத்திருப்பவராக எம்.எஸ். பாஸ்கர் , கதிரின் அப்பாவாக பாலா சிங் என நிறைய பேர் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தாலும் ஜொள் விட்டுக்கொண்டே பெண்களுக்கு சாக்லேட் கொடுத்து கவர் செய்யும் மில் சூப்பர்வைசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகராஜன் நம்மை கவர்கிறார் . இந்த படத்தின் மூலம் காஸ்டிங் டைரக்டாராக ( தமிழ் சினிமாவுக்கு இது புதுசு ) புது அவதாரம் எடுத்திருக்கும் சண்முகராஜனுக்கு வாழ்த்துக்கள் . படம் நெடுக உலா வரும் நிறைய புது முகங்களில் சிலரை தவிர்த்து மற்றவர்களை தேர்வு செய்வதிலும் , பயிற்சி கொடுப்பதிலும் இவர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது .

ரகுநந்தன் இசையில் ஆலைக்காரி உட்பட பாடல்கள் பஞ்சு போல் மென்மையாக இருக்கின்றன . காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் , சுரேஷ் பாகவின் ஒளிப்பதிவு இரண்டுமே தரமாக இருக்கின்றன . மனதை தொடும் டைட்டில் , படத்தின் ஸ்டில்கள் , விளம்பர யுக்தி , கதை , மிக எளிதாக அதே சமயம் அழுத்தமாக முதலாளி – தொழிலாளி பிரச்சனைகளை பதிவு செய்த விதம் , முதல் படத்திலேயே இயக்குனரின் மாறுபட்ட சிந்தனை இவைகளையெல்லாம் நிச்சயம் பாராட்டலாம் .

படம் இரண்டு மணி நேரமே ஓடினாலும் இழுவையாக இருக்கும் திரைக்கதை , அவ்வப்போது வந்து படத்தை நாடகத்தனமாக்கும் அழுகைக்காட்சிகள் , தொடர்ந்து வைக்கப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள் ( ரேணுகா மகளை கொல்வதற்கு முன் காட்டப்படும் மின் விளக்கு அவர் தற்கொலை செய்து கொள்ளும் சீனிற்கு முன்னரும் காட்டப்படுவதால் நடக்கப் போவது முன்னமே தெரிந்து சுவாரசியம் குறைகிறது ) இவைகளெல்லாம் படத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டிய குறைகள் .

எந்தெந்த தரப்பினர் எந்த மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்றெல்லாம் ப்ராஜெக்ட் செய்த படக்குழுவினர் இந்த படத்தை எந்த மாதிரியான தரப்பினருக்கு எடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருந்து திரைக்கதையையும் நேர்த்தியாக நெய்திருந்தால் கிருஷ்ணவேணி நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பாள் .

 

ஸ்கோர் கார்ட் :41 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>