Aug 312019
காஷ்மீரி தம் ஆலு- செய்வது எப்படி?
தேவை:
சிறு உருளைக் கிழங்கு-10; தயிர்-2 கப்; காஷ்மீரி மிளகாய் வற்றல்-12; சுக்குத் தூள்- ½ டேபிள் ஸ்பூன்; எண்ணெய்- ¼ கப்; பெருங்காயத்தூள்- ¼ ஸ்பூன்; மஞ்சள் தூள்-3/4 ஸ்பூன்; உடைத்த தனியா- 1 ஸ்பூன்; காஷ்மீரி மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்; தண்ணீர்-1 ½ கப்; வெந்தயப் ஒடி-1 ½ ஸாபூன்; தனியாத்தூள்-1 ஸ்பூன்; வறுத்த ஜீரகப் பொடி-1 ஸ்பூன்; கிராம்புத் தூள்-1 ஸ்பூன்; கறுப்பு ஏலக்காய்-5; ஏலக்காய்த்தூள்-1/2 ஸ்பூன்; கரம் மசாலா- 1 ஸ்பூன்; உப்பு- தேவையான அளவு; நறுக்கிய கொத்தமல்லித் தழை- சிறிது.
செய்முறை:
- உருளைக் கிழங்கை குழையாமல் வேக வைத்து தோல் உரித்து மேல்புறத்தில் சிறிய துளகள் போட்டு, எண்ணெயில் சிவக்க வறுத்து தனியே வைக்கவும். மிள்காய் வற்றலை விதை நீக்கி கால் கப் கொதிக்கும் நீரில் போட்டு , நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- தயிரில் மிள்காய் வற்றல் நீரையும், சுக்குத் தூளஒயும் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில், மஞ்சள், உடைத்த தனியா, மிளகாய்த்தூள் சேர்த்து லேசாகக் கிளறி,, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- குமிழிகள் வரும் சமயத்தில் , தனியா, சீரகம், கிராம்பு, நறுக்கிய கறுப்பு ஏலக்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சில நிமிடங்கள் கொதித்து லேசாக வற்றும் நேரம் , தயிக் கலவையைச் சேர்த்து கொதித்ததும் உருளைக் கிழங்கைப் போட்டு , மிதமான சூட்டிலேயே மூடி வைக்கவும். 4 நிமிடங்கள் கழித்து கரம் மிளகாய்ப் பொடி சேர்க்கவேண்டும்.
- 10 நிமிடங்களில் கலவை கெட்டியாகிவிடும். கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். சப்பாத்திக்கு சூட்டாகும்.
***********
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments