/* ]]> */
Sep 122011
 

ராஜபார்வை- கமல் , மாதவி நடிப்பில் காதல் அலைகளை இளமைக்கடலில் எழுப்பிய படம்..வைரமுத்துவின் வைர வரிகளுடன்-இதோ..

அந்தி மழை பொழிகிறது..

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே..

தேனில் வண்டு மூழ்கும் போது

பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுகுள் தீயை வைத்து மோகம் என்பாய்

தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே

எத்தனை நாளடி இளமையிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி

இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்

தாகம் தீர நீ தான் மேகம்

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?

தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சம் பொறு கொஞ்சம் இரு

தாவணி விசிறிகள் வீசுகிறேன்

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

சிப்பியில் தப்பிய நித்திலமே

ரகசிய ராத்திரி புத்தகமே

(அந்தி மழை)

தொகுப்பு

.. ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>