Jan 042012
க.மு , க.பி காதல் … ஷ்ராவணி

காதல் திருமணம்
மூலை முடுக்கு
பின் தொடரல்கள்
முடங்கி கிடந்த போதும்
நினைவுத்தொடரல்கள்
குறுங்காவியங்கள் செல்லில்
மின்னலாய் மின்னஞ்சல்கள்
நொடிக்கொரு பரிசளிப்புகள்
பார்வை கெஞ்சல்கள்
சைகை கொஞ்சல்கள்
நம்பிக்கை ஊட்டல்கள்
பின் சீண்டல்கள் தீ தீண்டல்கள்
இத்தனையும் தொடருமோ
இனியும் ….. காதலுடன் …
க.மு காதலில் காதல் நிறைய
ஆசை சிறிதே க.பி காதலில் இந்த
விகிதாச்சாரம் தலைகீழாகிவிடுமோ
அன்பின்றி வெறும் அரவணைப்பு
ருசிக்குமோ ? மனம் மாறுமோ
நிலைத் தடுமாறுமோ எட்டிய பின்
எட்டிக்காயாகி விடுமோ வாழ்க்கை
கல்யாணம் முடிந்தாலும்
நம் காதல் முடியாதென
மீண்டும் கடைசி முறை
ஒரு காதல் பொய்யாவது
சொல் என் காதல் கணவனே !
- ஷ்ராவணி
tags : tamil love peom analysing tamil love before and after love marriage
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments