/* ]]> */
Dec 182011
 

 

மழை கவிதை

மழை கவிதை

 

வெண்மேகங்கள் நகர்ந்து

ஒன்றோடொன்று மோதி

நீர்வாயு உள்புகுந்து

மேகம் சூல்கொண்டு

கருமேகமாய் பொழிவதே

மழைத்துளி !

 

ஆசை தேகங்கள் இணைந்து

ஒன்றோடொன்று கலந்து

காதல் வேகம் உள்புகுந்து

பெண்மையின் பெருமை

கருவாகிப்  பிறப்பதே

உயிர்த்துளி !

 

முதல் மழைத்துளி

கன்னம் தொடுகையில்

சிலிர்த்துப் பார்க்கும்

சின்னக் குழந்தை போல்

குட்டிக் குழந்தை

சின்ன விரல் தொட

சிலிர்த்துப் போகும்

அன்னை தந்தையர் !

 

தூறலாய் சாரலாய்

தூத்தல் போடையில்

ஒவ்வொரு துளியும்

கொண்டாடும் உலகம்

புயலாய் வெள்ளமாய்

ஆகையில் மிரளும்!

 

உயிர்த்துளியின்

உக்கிரம் கூட

உலகில் இன்னொரு

வெள்ளப் புயல்தான் !

கோபம் வெறியென – அது

வேகம் கொள்கையில்

உயிர்த்துளி வெறுத்து

உருண்டிடும் உலகும்!

 

பருவ மழையாய்

பயிர்கள் வளர்ப்பதும்

அடை மழையாய்

அழித்தல் செய்வதும்

அந்தந்த மழைத்துளி

அடைந்திடும் பாதை !

ஆக்கல் அழித்தல்

அடையாளமாக்கும்

அந்தந்த உயிர்த்துளி

வாழ்ந்திடும் வாழ்க்கை!

 

மழைத்துளி

உப்புக் கலந்து

கடல் துளியாவதும்

சூரியன் சுடுகையில்

காற்றில் கலந்து

மீண்டும்

மழைத்துளியாவதும்

மழைச்சக்கரம் !

 

உயிர்த்துளி

தன்னை மறந்து

உடல் துளியாவதும்

நேரம் நெருங்கையில்

காற்றில் கரைந்து

மீண்டும்

உயிர்த்துளியாவதும்

ஆன்ம சக்கரம் !

 

- அபி

tags : கவிதை , உயிர்த்துளி, மழைத்துளி, மழை கவிதை, தத்துவ கவிதை, வாழ்க்கை கவிதை, உயிர் கவிதை,  tamil poem, tamil life poem, thathuva kavithai, kavithai, tamil poem on life, tamil poem on rain,

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>