ஒரே நேரத்தில் இரண்டு பேரை ஒரு திருமணம் செய்வது மாதிரி பப்ளிசிடி ஸ்டில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பியது மிட்டாட் டீம். ஆனால் இந்த டீம் சமீபத்தில் வெளியிடும் ஸ்டில்கள் எல்லாம் கான்ட்ரோவர்சி மிட்டாயை விட கவர்ச்சி மிட்டாயை அதிகம் தருகின்றன.
டைரக்டர் அன்புவிடம் பேசிப் பார்த்தோம்…
“அய்யோ… மிட்டாய் உணமையிலேயே ஒரு அழகான லவ் ஸ்டோரி” என்றார்.
சுதந்திர தினத்தன்றுதான் முதல் பப்லீசிடி செய்தார்கள்… அதில் ஒரு பெண் இரண்டு பேரை ஒரே நேரத்தில் திருமணம் செய்வதைப் போன்ற ஸ்டில் கூடவே சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் என்ற கேப்ஷன் வேறு…
என்ன பாஸ் இதெல்லாம் என்றால்…
மிட்டாய் படம் பார்த்துட்டு வெளியே வர்ர யாரும் மிட்டாய் படம் நம்ம கலாச்சாரத்துக்கு எதிரானதுன்னு சொல்ல மாட்டங்க என்கிறார்…
வர்ர ஸ்டில்ல எல்லாம் பார்த்தா கலாச்சாரம் கொடி கட்டிப் பறக்கற மாதிரியில்ல இருக்கு… இது நல்ல படமா கில்மா படமான்னே புரியலயே… முத்தக் காட்சி வேற சூடு பறக்குது. எத்தன முத்தம் கொடுத்தங்கன்னு கதாநாயகிக்கே ஞாபகம் இல்லையாம்..
டைரக்டர் அன்பு, படத்துல ஹீரோவும் ஹீரோயினும் கொஞ்சம் ஓவரா அன்பு காட்டுற மாதிரியில்ல இருக்கு… பார்த்துப்பா மிட்டாய் திகட்டிட போகுது…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments