1. நடிகை மீரா ஜாஸ்மின் மேக்கப் அறையில் ஆளுயரக் கண்ணாடி முன் நின்று , முக பாவனையை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று ஒத்திகை பார்த்தபிறகே ஷூட்டிங் செல்கிறாராம். தேசிய விருது வாங்கியிருந்தாலும், நடிப்பதற்குமுன் ஹோம் ஒர்க் செய்வதை நிறுத்தவில்லையாம்.
2. படம் முழுக்க வராமல் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடிவிட்டுப் போன தேஜாஸ்ரீ ‘ இனி ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்’ என்று சபதம் போட்டாராம். சீந்துவாரே இல்லையாம்.இதனால் தன் கொள்கையை மாற்றிக்கொண்ட அவர், ‘ கழுகு ‘ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுகிறாராம். என்னபண்றது ? பொழப்புன்னு ஒண்ணு இருக்கே!
3. நடிகை ரீமாசென் இன்னமும் தமிழில் ஒரு வார்த்தை பேச முடியமல் தவிக்கிறாராம். பின்னே….? ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் எதிரில் யாராவது தமிழில் பேசினால் செம கோபம் வந்துடுமாம். ‘தன்னைப் பற்றித்தான் ஏதோ கிண்டல் அடிக்கிறார்களோ’ என்று நினைத்து தமிழில் பேசினாலே கடுப்பாயிடுவாராம். பேச விட்டாதானேங்க, தமிழ் கத்துக்கலாம்?
4.. நடிகை சுவாதியின் அம்மாவும் தம்பியும் ஐதராபாத்துக்கே சென்றுவிட்டார்களாம். எனவே சுவாதி சென்னையிலுள்ள தன் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டாராம். இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லையாம். கனடா ஸாஃப்ட்வேர் இஞ்சினீயரை மணந்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டாராம்.
5. நடிகை சினேகா இடையில் நிறுத்தியிருந்த பவர் யோகாவை மீண்டும் தொடர்வதால், இவருடைய உடல் வனப்பு கூடியிருக்கிறதாம். இப்படி சினேகாவின் அழகில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைப் பார்த்து சில ஹீரோயின்கள் போன் செய்து காரணத்தை விசாரிக்கிறார்களாம்.
6. ஆண்ட்ரியா, அனுஷ்கா இருவரும் போட்டோவுக்கு ஸ்பெஷல் போஸெல்லாம் தரமாட்டர்களாம். முன் அனுமதி கேட்டாலும்கூட கிடையாதாம். நிகழ்ச்சி முடிந்ததும் விருட்டென்று கிளம்பிவிடுவார்களாம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் பலத்த ஒற்றுமையாம். யாராவது மீறினால், கோபத்தில் பொசுக்கி விடுவார்களாம்.
8. தொண்டையில் ஏதோ குறைபாடாம். அதனால் பூர்ணாவுக்கு அடிக்கடி குரல் மாறிவிடுகிறதாம். ஆபரேஷன் இல்லாமல் மருந்து மாத்திரைகளில் குணப்படுத்திவிட நினைக்கிறாராம்.
9. நடிகை சங்கீதா சில இயக்குனர்களிடம் கதை இருந்தால் சொல்லும்படி கேட்கிறாராம். தனது கணவரும் பாடகருமான கிரீஷை எப்படியாவது ஹீரோவாக அறிமுகம் செய்துவிடவேண்டும் என்று மும்முரமாக இருக்கிறாராம்.
10. தனது புதிய ஃப்ளாட்டில் பெட் ரூம் முழுக்க தலையணையில் ஆரம்பித்து, சுவர்வரை எல்லாமும் நீலக் கலராக அமைத்திருக்கிறாராம் பிரியங்கா சோப்ரா.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments