/* ]]> */
Jun 132013
 

ப. சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டுக்குப் போன கலைஞர், அவருடைய தாயாரின் மறைவுக்குப் போய் அஞ்சலி செலுத்தமாட்டாரா, என்ன?ஆனால், ஏன் போகவில்லை? ப. சி.யின் குடும்பத்தினர் இவரைக் கடைசி நிமிடம் வரை கூட எதிர்பார்த்தார்களாம். மயானத்துக்குச் செல்லும்வரைகூட ப.சி.யும் இவரை எதிர்பார்த்தாராம். மாற்றுக் காட்சியினைச் சேர்ந்தவர்களின் இல்லங்களின் துக்க நிகழ்ச்சிகளுக்கும் கூடச் சென்று வரும் கலைஞர் இந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை என்பதற்கு 2ஜி. யின் பின்னணியில் ப.சி. இருப்பதாக கலைஞர் நம்புவதுதானாம். 2ஜி பற்றி பலமாகப் பேசப்பட்ட வேளையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சோனியா, ப்ரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் இவர்களோடு ப.சி.யும் கலந்துகொண்டார் என்பதும் அச்சமயம் வழக்கறிஞரும், தேசத்தின் சிறந்த அறிவாளியுமான ப.சி. எப்படியாவது காங்கிரஸுக்கோ, திமுகவுக்கோ பாதகமின்றி லீகல் பாயிண்டுகளை எடுத்துக்கொடுத்து காப்பாற்றி விடுவார் என்ற கலைஞரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டு காங்கிரஸின் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள திமுகவின் மேலே பழி விழுவதைத் தடுக்க முடியாதுங்குறதை எடுத்துச் சொல்லியது ப. சிதம்பரம்தான் என்று கலைஞர் நம்புவதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. ராசா, கனிமொழி ஆகியோரின் சிறைவாசத்துக்கும் உடல்நலமில்லாத தயாளு அம்மாள் கோர்ட்டுக்குச் செல்லவும் ப.சி. தான காரணம் என்பதுமே கலைஞரின் கோபத்துக்குக் காரணமாகிறது. துக்க நிகழ்ச்சிக்கு இதையெல்லாம் பார்க்க வேண்டாம் என்று கனிமொழியும் , ஸ்டாலினும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் , கேட்கவில்லை கலைஞர்.

Karunanidhi and chidambaram

Karunanidhi and chidambaram

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>