Dec 032020
கற்றுக்கொள்ளுங்கள்:
- மரத்திலிருந்து உதிர்ந்து மண்ணில் வீழ்ந்தாலும் மாறாப் புன்னகை கொள்ளும் தன்மையை மலரிடம் கற்றுக்கொள்.
- இலையுதிர் காலத்திற்காக வருத்தப்படாமல் மீண்டும் வசந்தத்திற்காக தன்னை புதுப்பித்து துளிர்க்கும் தன்மையை மரத்திடம் கற்றுக் கொள்.
- புதைத்தாலும் மடிந்து விடாமல் விருட்சமாய் வளரும் விடா முயற்சியை விதையிடம் கற்றுக் கொள்.
- முட்களையும் கூடாக்கி வாழும் மன வலிமையை பறவைகளிடம் கற்றுக்கொள்.
- பருக்கை சோறென்றாலும் பகிர்ந்துண்ணும் சமத்துவத்தை , காக்கையிடம் கற்றுக்கொள்.
- வேப்ப மரத்தில் கட்டினாலும் கசக்காமல் இனிக்கும் தேன் கூடையை தரும் தனித்துவத்தை தேனியிடம் கற்றுக்கொள்.
- கடும் பனியென்றாலும் இரையுண்ண வரிசையில் செல்லும் ஒழுங்கை எறும்புகளிடம் கற்றுக்கொள்.
- மலையில் அருவியாய், தரையில் நதியாய் மாறிக்கொள்ளும் சமயோசிதத்தை தண்ணீரிடம் கற்றுக்கொள்.
- மாலையில் அஸ்தமித்தாலும் விடியலில் ஒளியாய் உதயமாகும் புத்துணர்ச்சியை கதிரவனிடம் கற்றுக் கொள்.
- மேடு-பள்ளம், உயர்வு-தாழ்வு என்று பேதம் பாராமல் எல்லோருக்கும் சமமாய்ப் பொழியும் மகோன்னத மனதை மழையிடம் கற்றுக் கொள்.
***************************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments