/* ]]> */
Nov 272019
 

கறிவேப்பிலை தொக்கு- செய்வது எப்படி?

கறிவேப்பிலை தொக்கு

தேவை:

இளம் கறிவேப்பிலை-1 தம்ளர்; மிளகய் வற்றல்-5; மிளகு-3 தேக்கரண்டி; துவரம்பருப்பு-2 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு- தலா 1 தேக்கரண்டி; பெருங்காயத்தூள்-அரை தேகக்ரண்டி; வெல்லம்- சிறிதளவு; புளி – எலுமிச்சை அளவு; நல்லெண்ணெய், உப்பு.

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், மிளகாய் வற்றல், மிளகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.அதே வாணலியில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு  போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

மிக்ஸியில் கறிவேப்பிலை  கலவை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெல்லம், புளி உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.  நல்லெண்ணெய், கடுகு போட்டு தாளித்து இதில் ஊற்றவும்.

கறிவேப்பிலை தொக்கு சுவையானது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>