/* ]]> */
Jan 042017
 

கறிவேப்பிலை- உங்கள் கொலாஸ்ட்ரல் பிரச்சினைக்கு:

curry-leaves

• கறிவேப்பிலையில் 63 % நீரும், 6.1 % புரதமும், 1% கொழுப்பும் 4% தாதுப்புகளும், 6.4 % நார்ச்சத்துக்களும், 18.7 % மாவுச் சத்தும் இருக்கின்றன. • சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், இரும்புச் சத்து தாமிர சத்து, கந்தக சத்து, மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆசிட் போன்றவையும்,கறிவேப்பிலையில் உண்டு. இதனை பச்சையாகவோ, ஜூஸ் வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம்.

• செரிமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது கறிவேப்பிலை.உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால், கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும்.எனவே, தினமும் கறிவேப்பிலையை காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால், கொழுப்புகள் கரைப்பதுடன், உடலின் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கிறது.

• அது மட்டுமின்றி உடலிலுள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது். எனவே உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

• குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள், கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரல் பிரச்சினையால் அவதிப்படும் நபர்கள், இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.

• இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்கின்றது.இதன் மூலம் உடலில் ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது

. • இதின் ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதால், சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கின்றது.கறிவேப்பிலையை பேஸ்ட் செய்து , இதனுடன் மஞ்சள் சேர்த்து, பருக்கள் இருந்த இடத்தில் தடவினால், பருக்கள் மறைந்து விடும்

• குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கறிவேப்பிலையை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>