Jul 172012
கர்ப்பிணி பெண்ணின் கனவு பலன் – கோயில் தீர்த்தம் மூன்றாம் கோணம்
yen per ___________
naan 4 matham karpamaga ullen. thinamum sami kumpuduvathu pola kanavu varukirathu. athil kulanthai patri vendikiren, theertham vanguvathu pola mattrum yanaiyai parpathu polavum kanavil thondrukirathu.entha kanavin palan yenna.
அன்பு _________-,
மிக நல்ல பலன் தரும் கனவு இது. இந்தக் கனவின் மூலம் பல விஷயங்களை உங்களது சப் கான்சியஸ் மனது உங்களுக்கு சொல்ல முயல்கிறது. முதலில், தற்போது கர்ப்பமாக உள்ள நீங்கள் , உங்கள் குழந்தையை பற்றி கடவுளிடம் வேண்டுவது உங்களது எதிர்ப்பார்ப்புகளையும் குழந்தை பற்றிய உங்களது ஆவலையும் தெரிவிக்கிறது. இது எல்லா கர்ப்பமாக உள்ள பெண்களுக்கும் இயற்கையே.
ஆனால் இந்த “இன்னர் ஆங்சைடி” ( Inner Anxiety) வெளிப்படுகிற இடம் எது? ஒரு கோயில். அதுவே ஒரு மிக நல்ல மங்களகரமான அறிகுறி. அந்த கோயிலில் நடக்கும் சம்பவம் என்ன ? நீங்கள் தீர்த்தம் வாங்குவது போல நீங்கள் கனவு காண்கிறீர்கள். தீர்த்தம் என்பது பொதுவாக நம் ஆழ்மன அளவில் எழுப்பும் கன்னோடேஷன் என்ன ? பொதுவாக தீர்த்தம் சக்தி வாய்ந்தது என்பது ஒன்று . இன்னொன்று தீர்த்தம் புனிதமானது. ஆக உங்களுக்கு பிறக்கப் போவது ஆண் பிள்ளைதான் என்பதை இதன் வாயிலாக உங்கள் கனவு சொல்கிறது. மேலும், அந்த மகன் மிகவும் நல்லவனாக இருப்பான் என்பதையும் உங்கள் ஆழ்மனம் இந்தக் கனவின் மூலம் தெரிவிக்கிறது.
இன்னொரு விஷயம் இந்தக் கனவில் பிரதிபலிக்கிறது . அது யானையின் தரிசனம். இதுவும் பலத்தையும் உறுதியையும் குறிக்கும் ஒரு சிம்பல். இந்து சமயப்படி யானை விநாயகரையும் குறிக்கும். ஆக அனைத்து வகையிலும் இது ஒரு நல்ல நிகழ்வைக் குறிக்கும் கனவுதான். சக்திவாய்ந்த மன உறுதி மிக்க குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் !
மேலும் உங்கள் கனவின் பலன்களை நீங்களே அறீந்து கொள்ள
http://goo.gl/dwwpaE
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments