/* ]]> */
Jan 302018
 

கருப்பாக இருக்கும் உடல் நிறத்தை மாற்ற மருந்து உள்ளதா?

skin color

உடலின் நிறம் என்பது, தோலுக்குக் கீழே உருவாகும் ஒருவகை உயிரி நிறமியான ’மெலனின்’ என்ற வேதிப் பொருள் சுரப்பதால், ஏற்படுகின்றது. மெலனின் கூடுதலாகச் சுரந்தால் தோலின் நிறம் மேலும் கருமையடையும். புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆபத்தான புற ஊதாக் கதிர்களை மெலனின் தடுத்து நிறுத்தும். ஆகவே புற ஊதக் கதிர் கூடுதலாகப் பாயும் நில நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களின் தோல் கருமையாக உள்ளது.

மெலனின் உற்பத்தியை செயற்கையாகக் கட்டுப்படுத்தினால், தோல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு கூடலாம். தோல், முகம் முதலியவை வெண்மையடைய சில அழகுசாதனப் பொருள்களும் இருக்கின்றன. இவற்றில் ஒளிரும் பொருட்கள் இருப்பதால், புற ஊதாக் கதிரை உள்வாங்கி வெள்ளைஒளியை வெளிவிடும். இதனால்தான், முகம் தோல் போன்றவை வெண்மையாகக் காட்சி தருகிறதே தவிர தோல் வெளுக்காது.

^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>