/* ]]> */
Nov 242011
 

ஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா? – முனைவென்றி நா சுரேஷ்குமார்

 

 

tamil cartoon

tamil cartoon

நேயர்களே, பால், பெட்ரோல், மின்சாரம், பேருந்து கட்டண விலையுயர்வு வாரத்தை முன்னிட்டு நம் குடிமகன் தொலைக்காட்சியில்…

அ. இலவசங்களை வாரி வாரி வழங்கி உழைத்து உண்ண நினைக்கும் தமிழக மக்களை சோம்பேறிகளை மாற்றியதில் யாருக்கு அதிக பங்கு? ஜெயலலிதாவுக்கா? கருணாநிதிக்கா? சாலமன் பாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு.

ஆ. ஊழலில் விஞ்சி நிற்பது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் குழுவா? கருணாநிதி, கனிமொழி, இராசா, சிதம்பரம் குழுவா? திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிரிக்க வைக்கும் பட்டிமன்றம். ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு.

இந்நிகழ்ச்சிகளை உங்களுக்காக இணைந்து வழங்குபவர்கள்.

a.       அபேஸ் இன்சூரன்ஸ் (சாகும் போதும் செத்த பிறகும்)

b.      அய்த்தலக்கா பேங்க்

c.       டாஸ்மாக் நற்பணி மன்றம்

d.      பாய்சன் ரெஸ்டாரன்ட் a/c

e.      மன்மோகன் சிங், சோனியா காந்தியின் பெட்ரோல் விலையேற்றம் Pvt Ltd., (ஸ்வீட் எடு, கொண்டாடு)

f. கொள்ளையன் பொறியியல் கல்லூரி.

நேயர்களே நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள்!  தெருத்தெருவாய் பிச்சையெடுங்கள்!

- முனைவென்றி நா சுரேஷ்குமார்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>