/* ]]> */
Dec 072016
 

கரன்ஜி- செய்வது எப்படி?

karanji

தேவையான பொருட்கள்:

மைதா மாவு-2 தம்ளர்; ரவை-4 தேக்கரண்டி; எண்ணெய்; உப்பு.

பூர்ணம் செய்ய;

சர்க்கரை- 1 தம்ளர்; , தேங்காய்த் துருவல்-2 தம்ளர்;கசகசா- 4 தேக்கரண்டி; பாதாம், முந்திரி- தலா-10.

செய்முறை:

மைதா மாவுடன் ரவை, உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு பிசறி தண்ணீர் தெளித்து பூரி மாவு போல பிசையவும். அதை சிறிது நேரம் தனியாக வைக்கவும். தேங்காய்த் துருவலுடன் பொடித்த சர்க்கரை, வறுத்த கசகசா, பொடியாக நறுக்கிய பாதாம்-முந்திரி சேர்த்து கலக்க பூர்ணம் தயார்.மாவை சிறிய உருண்டைகளக்கி , விரலால் நடுவில் அழுத்தி, பள்ளமிட்டு அதன் உள்ளே பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி ஓரங்களை மடித்து வைக்கவும். காயும் எண்ணெயில் இதைப்  பொன் நிறமாகப் பொரித்து எடுத்தால், சுவையான கரன்ஜி  தயார்.

^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>