கம்பு தயிர் சாதம் -செய்வது எப்படி?
தேவை:
கம்பு-2 தம்ளர்; பால், தயிர்- தலா -2 தம்ளர்; பச்சை மிளகாய்-4; உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி; கடுகு -1 தேக்கரண்டி; தோல் சீவிய இஞ்சி- ஒரு சிறிய துண்டு;பெருங்காயம்-ஒரு சிட்டிகை; கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு.
செய்முறை:
மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.பாத்திரத்தில் கம்பு தானியத்தைப் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைகக்வும். சிறிது நேரம் கழித்து, மொக்ஸியில் கம்பை 2 முறை அடித்து, பிறகு புடைத்து தோலை நீக்கவும். அதை ரவை பதத்துக்கு உடைக்கவும்.
இதை குக்கரில் போட்டு 6 தம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பில் வைத்து 5 விசில் வந்ததும் இறக்கி அதனுடன் பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு , பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, தாளித்து , அத்துடன் மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி கம்பு சாதத்தில் கொட்டவும். தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் தயிர் கலந்து நன்றாகக் கிளறினால் போதும். கம்பு தயிர் சாதம் அசத்தும்.
*************
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments