கமல் எழுதிய சுய சரிதை:
‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய கமல், அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான கடந்துவந்த சினிமா பாதையை, ‘சிட்டிசன்-கே’ என்ற பெயரில், சுயசரிதையாக எழுதியுள்ளார். இதில், சினிமா சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கும் கமல், தன் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய எந்த விஷயத்தையும் எழுதவில்லை. அதே சமயம், தான் வளருவதற்கு காரணமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்களைப் பற்றி அதிகமாக எழுதியுள்ளார்.
மீண்டும் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன்:
ராதிகா மற்றும் தேவயானி பாணியில், சின்னத்திரை நடிகையாகியிருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது. இதற்குக் காரணம் மாஜி கதாநாயகி மீனா, மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடித்தபின், அவரது மார்க்கெட் எகிறி இருப்பதால், ‘ நானும் வெயிட்டான அம்மா ரோல் கிடைத்தால் நடிப்பேன்’ என்று தமிழ், தெலுங்கு சினிமா நணப்ர்களிடம் கூறி வருகிறார். அதோடு, தெலுங்குப் பட இயக்குனரான அவரது கணவர் கிருஷ்ணவம்சி அடுத்து இயக்கும் ஒரு த்ரில்லர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலும் நடிக்கிறார்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments