கமலின் விஸவரூபம் வெளியாகிறது
விஸ்வரூபம் படத்தின் சிறப்பு ஒலி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது . இவற்றில் பெரும்பகுதியை அமெரிக்காவில் வைத்து முடித்துவிட்டாராம் கமல். அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் விஎப்எக்ஸ் மது.
விஸ்வரூபம் படத்தின் முதல் ஸ்டில் வெளியானதிலிருந்து, விஸ்வரூபம் குறித்த கமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டாது. அதுபுரிந்து, பெரிய விலைக்கு வியாபாரம் பேசி வருகிறாராம் கமல்ஹாஸன். இந்தப் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போகிறது ஜெயா டிவி என முதலில் செய்திகள் வந்தன.ஆனால் இப்போது ஜெயா டிவி இல்லை சன் டிவிதான் வாங்கப் போகிறது என யூக செய்திகள் வெளியாகின்றன.
விஸவரூபம் படத்துக்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்கள். ஏற்கெனவே ஆளவந்தான் படத்திற்க்கும் இவர்கள்தான் இசை தந்தனர் .கமல் ,பாடல்களை ஜூனில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை இறுதிக்குள் விஸவரூபம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments