/* ]]> */
Jul 212011
 

1. பெயில் கிடைத்து வெளியில் வந்ததும் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கப்பட்டிருக்குதாம்.’ ஏன் கொடுக்கக்கூடாது? வழக்கு நிலுவையில் இருக்கும்போதுதானே ஜெயலலிதா முதல்வரானார் ‘ என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படுதாம். சிலர் திகைக்க … ஆனால் கனிமொழிக்கு என்ன இலாகா என்பது வரைக்கும் பிரணாப்பிடம் கலைஞர் பேசி விட்டதாகவும் அதனால் தான் மன்மோகன் இரண்டு இடங்கள் திமுகவுக்கு காத்திருக்கின்றன என கேபினெட் மாற்றியமைத்தபின் சொன்னார் என்கிறார்கள். கனிமொழிக்கு அது பெரிய சப்போர்டாக இருக்கும் என சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.  ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் கனிமொழிக்கு கடுமையான தண்டனை கிடைக்காமல் தப்பித்தாலே பெரிய விஷயம்… அமைச்சர் பதவியெல்லாம் பகல் கனவுதான் என சில காங்கிரஸ் காரர்கள் முணுமுணுக்கிறார்கள்.

2. சேலம் அரசு கலைக்கல்லூரி எதிரே ஹோமியோபதி கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் சசிகுமார், அவரைப் பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் நோயாளிகளுக்கு  மருந்துச்சீட்டோடு  திருக்குறள் மற்றும் பெரியார் தொடர்பான புத்தகங்களை  இலவசமா கொடுத்தனுப்புகிறார். மருந்துகள் நோயைக் குணப்படுத்தும். இந்தப் புத்தகங்கள் மனதை செம்மைப்படுத்தும்னு  சொல்கிறார். ஏழைகள் என்றால் ஃபீஸும் வாங்கமாட்டார்.  ஃபீஸுக்கு  பதில் ஏதாவது திருக்குறள் சொல்லச் சொல்வார். இவரிடம் திருமாவளவன், அறிவுமதி, தங்கர் பச்சான் போன்ற வி.ஐ.பி.க்கள் எல்லாம் வந்து சென்றிருக்கிறார்கள்.

3. அரசுப் பள்ளிகளை  அரசாங்கமே தனியாருக்கு தாரை வார்க்கிற போக்கு இப்போது காணப்படுகிறது.  அரசுப் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற  ராகவி என்ற மாணவி,  ” எனக்கு உதவித் தொகை கொடுங்கள்.  நான் இதே பள்ளியில் படித்து +2விலும் அதிக மதிப்பெண் பெற்று, நான் இதுவரை படித்த இதே பள்ளிக்கு பெருமை தேடித் தருவேன்” என்றார். ஆனால், ‘ அதெல்லாம் முடியாது. தனியார் பள்ளியில் சேர்ந்தால்தான் உதவித் தொகை தர முடியும். ‘ என்று சொல்லி விட்டார்கள்.  நன்றாகப்படிக்கக்கூடிய பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு தாரை வார்த்து தனியார் பள்ளிகளால்தான் சிறப்பான கல்வியைத் தர முடியும் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் இதற்கு அரசே துணை போகக்கூடாது என்பதுதான் மாணவர்களின் ஆதங்கம்.

4. 2007ம் ஆண்டு ஜூலை மாதம்’ முத்துக்குமரன் குழு’ ‘சமச்சீர் கல்வி’ பற்றிய பரிந்துரையை முன்னாள் முதல்வர் கலைஞரிடம் சமர்ப்பித்தது.   ஆனால், இந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை முதன்முதலில் எதிர்த்தவர் துக்ளக்  ‘ சோ ‘ தான்.  சமச்சீர் கல்வித் திட்டம் தரம் தாழ்ந்தது என்று ஆரம்பத்தில் கருத்து தெரிவித்தார்.  அதன் பின்னர்  ‘ ஒரு சிலர் உயர் கல்வி பெறுவதை தடுப்பதற்காக  அனைவருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்’ என்று விளக்கம் அளித்தார். இப்போது துக்ளக் சொல்வதே அரசுக்கு வேதமாகிவிட்டது. உயர்கல்வி என்பதை ஒரு சிலர் பின்பற்றுகிறார்கள். அந்த உரிமை பறிபோய்விடக்கூடாது.  ஆனால், சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த உரிமை பறிபோய்விடும் என்றும் அந்த ஒரு சிலர் அச்சப்படுகிறார்கள். ஆகவேதான் இந்த திட்டத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள். துக்ளக் ‘ சோ ‘ வின் கருத்தும் அதையே  பிரதிபலிக்கிறது. அரசும் அதையே அரங்கேற்றிவிடுமா?.

5. திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  10 வருடமாக பூட்டியே கிடக்கிறது. பழைய தி.மு.க எம்.எல்.ஏ. பிச்சாண்டி இதை உபயோகித்துக்கொள்ளவில்லை.  ஆனால், தற்போதைய  தி.மு.க. எம்.எல்.ஏ.  எ.வ. வேலு, இந்த கட்டடத்தை சுத்தப்படுத்தி, அங்கே வந்து உட்கார்ந்தார். அங்கே ஒரு ஜெராக்ஸ் மெஷினை வாங்கிப் போட்டு  பள்ளிக் கல்லூரி மாணவர்கள் இங்கே இலவசமா ஜெராக்ஸ் எடுத்துக்கலாம்ன்னு சொல்லிட்டார். அதோட அரசுத் தேர்வுகளுக்கான எல்லா விண்ணப்பங்களையும் இங்கே வினியோகிக்க சொல்லிட்டார். அதோட மக்கள் மாதம் ஒருமுறை இங்கே தன்னிடம் நேரில் மனு கொடுக்கலாமுன்னும் சொல்லியிருக்கார். இதைப் பார்த்து ஜனங்க மகிழ்ச்சி அடஞ்சிருக்காங்க.

6. கவர்னர் பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. இதற்காக இவருடைய மகன்கள் டெல்லிக்குப் போய் தேவையான வேலைகளைச் செய்துவிட்டார்களாம்.

Tags : tamilnadu latest political developments in politics about karunandihi daughter kanimozhi getting cabinet birth in manmohan singh congress government.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>