Oct 202016
கண்களில் கருவளையம் நீங்க:
- வெள்ளரிச்சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம்.
- தூங்கப் போகுமுன் கண்களின் கீழ் ஆலிவ் ஆயில் தடவலாம்.
- வெண்ணெயுடன் கொத்தமல்லிச்சாறு கலந்து கண்களுக்கு பேக் போடலாம்.
- சந்தனம் மற்றும் ஜாதிக்காயை இழைத்து, கண்களைச் சுற்றிலும் பூசலாம்.
- ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்து மை போல அரைத்து,கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்.
- தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின்மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
- தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம்.
- பப்பாளியின் சதைப் பகுதியை பாலாடையுடன் சேர்த்து மசித்து, முகம் , கழுத்துப் பகுதிகலில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments