ஐந்து லட்சம் ஹிட்ஸ்….
இந்த அமோக வரவேற்பை தந்து மூன்றாம் கோணத்தை ஆதரிக்கும் வாசகரகளுக்கு எங்கள் நன்றிகள் பல!
உங்கள் மூன்றாம் கோணம்… ஐந்து லட்சம் ஹிட்ஸ் எட்டியதை முன்னிட்டு இரண்டு போட்டிகளை நடத்த எத்தனிக்கிறோம்
1. பயணக் கட்டுரை போட்டி
இந்த கோடை விடுமுறையில் எங்கேயாவது டூர் போயிருப்பீர்கள்… அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
இது ஒரு பயணக் கட்டுரைப் போட்டி. ஆகையால் சில ஸ்பெஷல் பயண டிப்ஸ்களுக்கும் அழகான புகைப்படங்களுக்கும் தனி மார்க்ஸ் உண்டு.
பயணத்தின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .
பரிசுகள் :
1. முதல் பரிசு ரூ . 1000/-
2. இரண்டாம் பரிசு ரூ . 500/
மேலும் மூன்றாம் கோணம் முன்பக்கத்தில் வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பு அவர்கள் ப்ளாக் லிங்கோடு ஒரு மாதத்திற்கு டிஸ்ப்ளே செய்யப்படும்.
சிறப்பு பரிசுகள் :-
போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .
2. கவிதைப் போட்டி
இந்த புகைப்படத்தைப் பார்த்து 100 வார்த்தைகளுக்குள் ஒரு கவிதையை எழுதி அனுப்புங்கள்.
கற்பனை குதிரையை தட்டுங்கள்
பரிசுகள் :
1. முதல் பரிசு ரூ . 500/-
2. இரண்டாம் பரிசு ரூ . 300/
மேலும் மூன்றாம் கோணம் முன்பக்கத்தில் வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பு அவர்கள் ப்ளாக் லிங்கோடு ஒரு மாதத்திற்கு டிஸ்ப்ளே செய்யப்படும்.
சிறப்பு பரிசுகள் :-
போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் முதல் மூன்று கட்டுரைகளுக்கும் கவிதைகளுக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு .
அனுப்ப வேண்டிய முகவரி :
1. கட்டுரைகளை/ கவிதைகளை நீங்கள் ப்ளாக் நடத்துவபராக இருந்தால் உங்கள் ப்ளாக்கிலேயே வெளியிட்டு லிங்கை மட்டும் எங்களுக்கு கொடுக்கலாம். இல்லை, கட்டுரை / கவிதையையே எங்களுக்கு moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு moonramkonam@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .
அல்லது இதே பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.
கட்டுரைகளை / கவிதைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 30, 2011.
(வாசகர்களின் வேண்டுகோளிக்கிணங்க கடைசி தேதி 15.07.11 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.)
சில விதிமுறைகள் :
போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது நடுவர் குழுவின் முடிவே.
ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்
போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை மூன்றாம் கோணம் தக்கவைத்துக் கொள்கிறது.
மூன்றாம் கோணம் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த எவரும் பங்கேற்க கூடாது.
நடுவர் தீர்ப்பே இறுதியானது.
பங்கேற்கும் கட்டுரைகள் / கவிதைகள் மூன்றாம் கோணத்தில் வெளியிடப்படும்.
கவிதை போட்டியில் இதுவரை பங்கேற்ற கவிதைகள்
பயணக் கட்டுரை போட்டியில் இதுவரை பங்கேற்ற கட்டுரைகள்
1. ஆதித்த சோழனைத் தேடி – பார்த்திபன்
2. ஐரோப்பா என் பயண அனுபவங்கள் – கலையரசி
3. காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர் – கீதா
வாசகர்களின் வேண்டுகோளிக்கிணங்க கடைசி தேதி 15.07.11 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags : poem, essay, tamil poem, tamil essay, essay competition, travel, travel essays, பயணக் கட்டுரை, கட்டுரை, கவிதை, போட்டி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments