/* ]]> */
Mar 262014
 

சிவகாசியில் கட்டிய கோயிலை இடிக்கும் திருவிழா:

MUD TEMPLE
சிவகாசியில் ஒரு வினோதமான பழக்கம் உள்ளதாம். சாதாரணமாக ஒரு கோவில் கட்டினால் அதனை காலம் காலமாக வழிபாடு நடத்தி, தொடர்ந்து போற்றுவது வழக்கம். ஆனால் கட்டிய கோயிலை வழிபாடு செய்து மூன்றே நாட்களில் இடிக்கும் வழக்கத்தை ஒரு விழாவாக கொண்டாடுகிறார்கள். இதனை ‘ தெருக்கட்டுப் பொங்கல்’ என்பார்கள். மாசி மாதத்தில் ஒரு வாரத்தில் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். இந்த ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் நடக்கும். இந்த விழா நடக்கும்போது முளைப்பாரி எடுக்கும் பெண்கள் விரதம் இருப்பாங்க. பிறகு தெருவில் எல்லாருக்கும் பொதுவான ஒரு இடத்தை சுத்தப்படுத்தி, இந்த இடத்தில் ஒரு விளக்கை ஏற்றுவார்கள். பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த விளக்கை அம்மனா நினச்சு, கும்மி அடிச்சு, பூஜை செய்வாங்க. பிறகு, வெள்ளிக் கிழமை காலையில விளக்கு வச்சு , சாமி கும்பிட்ட இடத்துல சின்னதா ஒரு கோவில் கட்டுவார்கள். பூடகமாக இருக்கும் அம்மன் , மறுநாள் முத்தாலம்மனா மாறிடுவா. அவளுக்கு கோழியோட கால் ரத்தத்துல கண்திறப்பு நடத்துவார்கள்.
இந்த விழாவுக்காக, பெண்கள் கையில் காப்பு கட்டி ஒரு வாரம் விரதம் இருக்கிறார்கள். செங்கல் அடுக்கி, செம்மண் குழைத்து கோயில் கட்டத் துவங்குவது வெள்ளிக்கிழமை என்றாலும். சனிக்கிழமை இரவில்தான்அம்மனின் உருவம் அமைக்கப்படுகிறது. . இதில் மாரியம்மன், முத்தாலம்மன் என ஒவ்வொரு தெருக்காரர்களும் தங்களுக்குப் பிடித்த அம்மனின் திரு உருவைச் செய்து வழிபாடு நடத்துகின்றனர். இந்த உருவும் செம்மண்ணால் ஆனதே. சனிக்கிழமை ராத்திரி பெண்கள் எல்லோரும் சேர்ந்து சாமிக்கு படையல் போடுவார்கள். கோழி, கருவாடு, முட்டை என எல்லாத்தையும் படச்சு சாப்பிடுவார்கள். முளைப்பாரி ஊர்வலம் , அன்னதானம் என அனைத்தும் நடந்தேறும். மறுநாள் முளைப்பாரி ஊர்வலம் முடிந்த பிறகு எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அப்புறம் வயசான மூன்று பெண்கள் அம்மன் சிலை இருக்கிற மண்ணை ஒருபிடி மட்டும் எடுத்து தனியா ஒரு துணியில கட்டி வச்சிடுவாங்க. இதை அந்தப் பெண்களைத் தவிர வேறு யாருமே பார்க்கக்கூடாதுங்குறது ஐதீகம். அடுத்த வருஷம் கோவில் கட்டுறப்போ அந்த மண்ணோட கலந்துடுவாங்க. விழாவின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையன்று , கட்டிய கோவிலை இடித்து சாமியை கிணற்று நீரில் கரைத்துவிடுகின்றனர்.
இந்த திருவிழாவில் ஆண்கள் கலந்துக்க முடியாது. அம்மன் பிறந்து 24 மணி நேரத்துக்குள்ள அழியறதுதான் இந்த விழாவின் விசேஷமே. இப்படி கும்பிடுவதால நோய் நொடியெல்லாம் பறந்து போய்விடுகிறது என்பது நம்பிக்கை. கேட்ட வரம் கிடைக்குமாம். பிள்ளையில்லாத பெண்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். , குழந்தைகள எல்லாம் எந்தக் குறையும் இல்லாமல் வாழணும்னு பெத்தவங்க வேண்டிக்கிட்டதும் நடக்குது.
எந்தவித வைதீக நடைமுறையையும் கையிலெடுக்காத விழான்னு கூட இதைச் சொல்லலாம். இதோட ஸ்பெஷாலிட்டியே எல்லா சாதி மதத்தை சேர்ந்தவங்களும் கலந்துக்கிறதுதான். தெருவுல இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு கொடுத்து தெருவே கூடி நின்னு நடத்தி ஒற்றுமையை நிரூபிக்கும் திருவிழா இது .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>